நெருங்கி வரும் தீபாவளி.. அலை மோதும் மக்கள் கூட்டம்.. கூடுதல் பேருந்துகளை களம் இறக்கிய எம்டிசி!

Oct 20, 2024,10:13 AM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் துணி எடுக்க, பொருட்கள் வாங்க மக்கள் அலை அலையாக கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.


தீபாவளி நெருங்கி விட்டது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி திருநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ளது. மக்கள் ஜவுளிக் கடைகளுக்கும், நகைக் கடைகளுக்கும், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட இன்ன பிற கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பர்ச்சேஸ் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளதால் கூட்ட நெரிசலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.


இடை இடையே மழை வந்தபோது சற்று தொய்வடைந்த பர்ச்சேஸ் தற்போது மழை இல்லாத நேரத்தில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக துணி எடுக்க, பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர். இதே நிலைதான் மற்ற மாநகரங்களிலும் நிலவுகிறது.


இந்த நிலையில் மக்கள் நலனுக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது. இதுதொடர்பாக எம்டிசி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 20.10.2024 (இன்று), 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்.


கூடுதலாக இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்த விவரம்:


19, தி. நகர் - திருப்போரூர்

47ஏ, வில்லிவாக்கம் - திருவான்மியூர்

147சி, தி.நகர் - அம்பத்தூர் ஓடி

147ஏ, தி.நகர் - ஜேஜே நகர் கிழக்கு

120, ஆவடி - பிராட்வே

47, பெசன்ட் நகர் - வில்லிவாக்கம்

500, தாம்பரம் - செங்கல்பட்டு

51ஏ, தி.நகர் - தாம்பரம்

154, தி.நகர் - பூந்தமல்லி

64சி, பிராட்வே - மணலி

500பி, பல்லவாரம் - செங்கல்பட்டு

51, தாம்பரம் - வேளச்சேரி

3, தி.நகர் - திருவான்மியூர்

72, தி.நகர் - திருவேற்காடு

21ஜி, பிராட்வே - கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

ஜி18, தி.நகர் - கூடுவாஞ்சேரி

242, பிராட்வே - செங்குன்றம்

19ஏ, தி.நகர் - செம்மஞ்சேரி எஸ்சிபி

56சி, திருவொற்றியூர் - பிராட்வே

57, வள்ளலார் நகர் - செங்குன்றம்

எம்27, தி.நகர் - கோயம்பேடு பஸ் நிலையம்

33சி, பிராட்வே - கேகேடி நகர்

6டி, டோல்கேட் - திருவான்மியூர்

இ18, பிராட்வே - கூடுவாஞ்சேரி

12ஜி, கேகே நகர் - அண்ணா சதுக்கம்

5பி, தி.நகர் - மயிலாப்பூர்

159ஏ, திருவொற்றியூர் - கோயம்பேடு பஸ் நிலையம்

37, வள்ளலார் நகர் - பூந்தமல்லி

56ஏ, வள்ளளார் நகர் - பூந்தமல்லி

18ஏஎக்ஸ், பிராட்வே - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்