சென்னை: மார்ச் 3ம் தேதியன்று சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் 150 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் இது நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தற்போது 150 கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
03.03.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மா.போ.கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு.. எத்தனை பேருந்துகள்?

அதன்படி 18ஏ பேருந்தானது, பிராட்வே முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்படும். 18ஜி வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும். 18ஏசிடி கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும்.
பி18 கொருக்குப்பேட்டை - தாம்பரம் மார்க்கத்தில் கூடுதலாக 30 பேருந்துகளும், இ18 பிராட்வே - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும். ஜி18 தியாகராய நகர் - கூடுவாஞ்சேரி மார்க்க்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
{{comments.comment}}