சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் போக்குவரத்து இரவு நேரங்களில் நிறுத்தி வைத்து பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து எம்டிசி நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக எம்டிசி விடுத்துள்ள அறிக்கை:
பீச் - எழும்பூர்
28ம் தேதி தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 07.00 மணி முதல் மாலை 07.45 மணி வரை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஊர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}