என்னா பஸ்ஸுய்யா.. "ஆமா,  இது மெட்ராஸா.. இல்லை லண்டனா".. வாய் பிளக்க ரெடியாகுங்க!

Aug 04, 2023,12:57 PM IST
சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடப் போகின்றன. ஒரு காலத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாக இருந்தன. காலப் போக்கில் அவை வழக்கொழிந்து விட்டன. இப்போது மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னை சாலைகளில் ஓடப் போகின்றன.

கடந்த 70களில் சென்னையில் டபுள் டெக்கர் பஸ்கள் அறிமுகமாகின. ஆரம்பத்தில் பிராட்வே - தாம்பரம் இடையே இவை ஓடின. சென்னை நகரின் அடையாளமாக இவை திகழ்ந்து வந்தன. பல திரைப்படங்களில் டபுள் டெக்கர் பஸ்கள் இடம் பெற்று அவற்றின் மீதான கிரேஸையும் அதிகப்படுத்தியுள்ளன. பின்னர் இந்தப் பேருந்துகள் பராமரிப்பு சிரமம் காரணமாக நிறுத்தப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து டிரெய்லர் பஸ்கள் அறிமுகமாகின. இரண்டு பஸ்களை இணைத்து இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் குறுகிய சாலைகளில் இந்த பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்படவே இதையும் பின்னர் நிறுத்தி விட்டனர்.



சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் டபுள் டெக்கர்களை அறிமுகப்படுத்தினர். சென்னை உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையே இந்த பேருந்து அறிமுகமானது. ஆனால் அதுவும் தாக்குப்பிடிக்கவில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னை சாலைகளில் ஓடவுள்ளன.

இந்த முறை அதி நவீன எலக்ட்க் டபுள் டெக்கர் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் இயக்கும் முறை மிகவும் எளிமையானது என்பதாலும், பார்க்க சூப்பராக உள்ளதாலும் இந்த பஸ்கள் நிச்சயம் மக்களின் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ்களின் முக்கிய விசேஷமே இவை குளுகுளு வசதியுடன் கூடியவை என்பதுதான்.  மும்பையில் இதுபோன்ற பஸ்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன. அதே வகையான பேருந்துகளைத்தான் சென்னையிலும் அறிமுகப்படுத்தவுள்ளனர். முதல் கட்டமாக மெரீனா கடற்கரை சாலையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

லண்டனில்தான் டபுள் டெக்கர் பஸ்கள் மிகவும் பிரபலமாகும். இன்றளவும் அவை சிறப்பாக இயங்கி வருகின்றன. அங்கிருந்து இந்தியாவில் முதலில் கொல்கத்தாவுக்கும், பிறகு மும்பை, டெல்லி, சென்னைக்கும் இத்தகைய பஸ்கள் அறிமுகமாகின. பெங்களூரிலும் பின்னர் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடத் தொடங்கின.

தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ள நவீன டபுள் டெக்கர் பஸ்களை சென்னை மாநகரின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குளுகுளு வசதியுடன் கூடிய பஸ்களாக இவை இருப்பதால் பயணமும் சுகமாக இருக்கும். அலுப்பும் தெரியாது.  இந்த மாத இறுதிக்குள் எந்தெந்த ரூட்களில் இந்த பஸ் இயக்கப்படும் என்பது முடிவாகி விடுமாம். பிறகு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்