மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற உள்ள முகேஷ் அம்பானி மகன் திருமணத்தையொட்டி ஜாம்நகர் அருகே உள்ள கிராம மக்கள் 51,000 பேருக்கு கல்யாண விருந்து வழங்கியுள்ளது அம்பானி குடும்பம்.
இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. இவரது இரண்டாவது மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
திருமணத்தை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருமணத்திற்கான வைபவங்கள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நேற்றில் இருந்தே களை கட்ட தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.
இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் மதியம் 225 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இரவு விருந்திற்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்திற்கு 85 வகையான உணவுகளும் சமைத்து பரிமாறப்பட உள்ளது. மகனின் திருமண சாப்பாட்டை ஊரே மெச்சும் அளவிற்கு செய்ய வேண்டும் என்று முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51,000 பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர். உணவைத் தொடர்ந்து, கிராமத்தை சேர்ந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அம்பானி வீட்டு திருமணம் என்றால் சும்மாவா என்று அந்த ஊர் மக்கள் மெச்சி வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}