மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் ரூ.16,811 கோடிகள், அதாவது 2 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை சந்தித்துள்ளன.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்ததை விட மிக குறைந்த அளவிலான வருமானத்தையே பெற்றுள்ளது. இதனால் இன்று ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதத்திற்கு அதிகமாக சரிவை சந்தித்தது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் ரூ.16811 கோடிகள் சரிந்தன. இதனால் ஒரே நாளில் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்ட இதே காலாண்டில் ரூ.17,394 கோடிகள் லாபத்தை பெற்றது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 3.34 சதவீதம் வரை ரிலையன்ஸ் பங்குகள் சரிந்ததன் எதிரொலியாக அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்து, இழப்பையும் சந்தித்துள்ளார்.

அம்பானிக்கு சரிவு.. அதானிக்கு உயர்வு
இன்று அம்பானி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அதே நேரத்தில், மற்றொரு தொழிலதிபரும், பணக்காரருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.266 கோடி அதிகரித்துள்ளது. இவருக்கு ரூ.99.2 பில்லியன் லாபம் கிடைத்துள்ளது. தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18வது இடத்தில் இருக்கும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த சந்தித்த இழப்புகளில் இருந்து அதானி குழுமம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 241 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் எலன் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்கள். இவரைத் தொடர்ந்து ஜெஃப் பிசேஸ் 211 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் இருந்து வருகிறார். பெர்னார்ட் அர்னால்ட் ஒரே நாளில் 3.46 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதால் அவரது சொத்து மதிப்பு தற்போது 182 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}