காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக 18720 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பல அடுக்கு மாடி தங்கும் விடுதியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 சிப்காட் தொழில் பூங்காக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பிராந்தியமே தொழில் மண்டலம் ஆகும். ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், வல்லம் மற்றும் ஓரகடம் ஆகிய இடங்களில் சிப்காட்கள் இயங்கின்றன. இவற்றில் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

சிப்காட் வளாகத்தில் மென்பொருள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தொழிற்சாலை, பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை, மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என பல வகையான தொழிற்சாலைகள் இயங்க வருகின்றன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்குள்ள தொழிலாளர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர்.
அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து அரசு சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உள்ளிட்ட பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிப்காட் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துடன் இணைந்து சிறப்பு திட்டத்தை உருவாக்கியது.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் ரூ. 706.5 கோடி திட்ட மதிப்பிட்டில் 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 18,720 படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் ஒரு அறையில் ஆறு படுக்கை வசதிகளுடன் 1,440 நபர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}