மெக்சிகோ பெண்ணை  "பலமுறை".. வக்கிரம் பிடித்த "டிஜே".. அதிர்ந்து போன மும்பை!

Dec 02, 2023,05:58 PM IST
- மஞ்சுளா தேவி

மும்பை: தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் மேலாளர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

31 வயதான அந்தப் பெண், மும்பையில் வசித்து வருகிறார். இவர் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நபர் டிஜேவாக உள்ளார். அவருக்கு வயது 35. இந்த நிலையில் அந்த மேலாளர் தன்னை கடந்த 2019ம் ஆண்டு முதல் பலமுறை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் மேலாளர் மீது பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான முறையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் அந்த நபரைக் கைது செய்தனர்.



விசாரணையின்போது, அந்த நபர், ஏற்கனவே பல பெண்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபத்தியதாக தெரிய வந்தது. முன்னதாக மெக்சிகோ நாட்டுப் பெண் கூறிய புகாரில், நான் தற்போது மும்பையில் வசித்து வருகிறேன். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலமாக அவரை சந்தித்தேன். தனது பந்த்ரா வீட்டில் வைத்து பல சந்தர்ப்பங்களில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் மறுத்ததால் வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டி நெருக்கமான புகைப்படங்களை எடுத்தார். 2020 ஆம் ஆண்டு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகும் , எனக்கு ஆபாசமான படங்களையும், தகாத செய்திகளையும் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்