சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் கடுப்பாகியுள்ள அந்த அணியின் ரசிகர்கள், அணியின் ஜெர்சி, தொப்பியை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை, சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸிடம் இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் ரசிகர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா மாற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்ட அணியாக எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திற்கு வந்து விட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்ததன் விளைவாக, அணியின் தொப்பிகள் மற்றும் ஜெர்சிகளை எரித்து ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சமூக வலைதளங்களில் அந்த அணியை அன் பாலோ செய்து வருவதால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}