"வாவ்.. என்னா பவுலிங்".. அசத்திய போலீஸ்காரர்..  புகழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Aug 12, 2023,07:36 PM IST
மும்பை:  ஒரு போலீஸ்காரர் சூப்பராக பவுலிங் செய்யும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமும் அந்த  போலீஸ்காரரின் திறமையைப் பாராட்டியுள்ளது.

இந்தியாவில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு கிரிக்கெட் ரசிகர் மீதுதான் மோத வேண்டியிருக்கும். கிரிக்கெட் போட்டிகள் நடக்க ஆரம்பித்து விட்டால் போதும், தெருவுக்குத் தெரு கவாஸ்ர்களும், ரவி சாஸ்திரிகளும் கலக்க ஆரம்பித்து விடுவார்கள்.



"மாப்ள அந்தப் பந்தை அப்படி போட்டது தப்புய்யா.. ஈஸியா பிட்ச் ஆக விட்டுட்டான பாரு.. இப்படிப் போட்டா எப்படி.. நேக்கா போடணும்ய்யா.. வைட் போட்டுட்டு கூட அப்புறமா லெக் சைட் போட்டிருக்கலாம்.. மிஸ்ஸாய்ருச்சுய்யா.. அவன்தான்  ஸ்விங் அடிக்கிறான்னு தெரியுதுல்ல.. பிறகு ஏன் இவன் அதே மாதிரியே போட்டிட்டிருக்கான்"..  என்ற ரீதியில் விமர்சனங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

இந்தியா அந்த அளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கிறது. தேசிய விளையாட்டான ஹாக்கியை விட கிரிக்கெட்டுக்குத்தான் இங்கு ரசிகர்கள் அதிகம். கிரவுண்டில் யாராவது கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தால் போய் ஒரு பால் போட்டு விட்டு வர ஆசைப்படுவோர் இங்கு அதிகம். அந்த வகையில் இப்போது ஒரு போலீஸ்காரர் போட்ட பவுலிங் பலரையும் கவர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுதொடர்பாக ஒரு வீடியோவை  தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளது. அது ஒரு கிரிக்கெட் பயிற்சியாகும். அப்போது ஒரு இளம் வீரருக்கு ஒரு போலீஸ்காரர் சூப்பராக பவுலிங் போடுகிறார். கைதேர்ந்த ஒரு பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுவாரோ அதேபோல இவரும் சூப்பராக போடுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஹலோ 100ஆ.. இங்க ஒருத்தர் அனல் பறக்க பந்து வீசுகிறார்.. என்னான்னு பாருங்க என்று ஜாலியான கமெண்ட்டும் போட்டுள்ளது. இந்த வீடியோவை துர்ஜான் ஹர்சானி என்பவர் எடுத்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த் பலரும் இவர் ஒரு சிறந்த நெட் பவுலர் என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்