அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!

Oct 01, 2026,02:25 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


இன்று அக்டோபர் 1 உலகமெங்கும் சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது.


காபி வர்த்தகத்தை மேம்படுத்துவதும், காபி விவசாயத்தில் ஈடுபடும் உழைப்பாளர்களை அங்கீகரிப்பதும்,இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்....


காலையில எழுந்து மணக்க மணக்க ஃபில்டர் காபி குடிக்கிற சுகமே தனி தாங்க...


காபிக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பதும் நமக்குத் தெரியும்...


சுவை மிகுந்த காபி உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு,...


மொராக்கோ நாட்டின் சூஃபி அறிஞர் நூருதீன் அபு அல் ஹாசன் என்பவர் எத்தியோப்பியா சென்றிருந்தார்... அங்கே ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து பழங்களைச் சாப்பிட்ட பறவைகள் மட்டும் உற்சாகமாக இருப்பதை நோட்டமிட்டார்...




உடனே அந்தப் பழங்களைப் பறித்து அதன் கொட்டைகளைத் தானும் உண்டு பார்த்தார்... அடடே அதனை சாப்பிட்டதும் அவருக்கும் அந்த உற்சாகமும் இனம் புரியாத  புத்துணர்ச்சியும் தொற்றிக் கொண்டது....


இப்படித்தான் காபி உருவானது...


இந்தியாவிற்கும் ஒரு சூபி துறவி மூலம் தான் காபி வந்ததாக அறியப்படுகிறது... கர்நாடகாவில் தான் முதன் முதலில் காபி பயிரிடப்பட்டது...


அது இருக்கட்டும்....


எல்லாரும் லன்ச் சாப்பிட்டிருப்பீங்க.. கூடவே காபியும் சாப்பிட்டீங்களா.....??


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்