முறுக்கு பாட்டி முத்தம்மா!

Jan 10, 2026,10:45 AM IST

- தி. மீரா


முத்தம்மா ஒரு முறுக்கு சுட்டு விற்கும் பாட்டி. அவள் ஒரு இருபத்திரண்டு வருடங்களுக்கு மேலாக இந்தத் தொழில் செய்து வருகிறாள். அவளுக்கு என்று யாரும் கிடையாது. கணவரும் இல்லை. குழந்தைகள் கிடையாது. உறவுகள் என்று பெரிதாக சொல்லிக்கொண்டு யாரும் இருந்ததில்லை. அவளுக்கு வருமானம் பெரிதாக எதுவும் கிடையாது. தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த பாட்டிக்கு என்று உதவி செய்வார்கள். பொருளுக்கு பொருள் உதவி இல்லையென்றால் வியாபாரத்திற்குத் தேவையான பொருட்கள், சாமான்கள் என்று சிலசமயம் பாட்டி கடனாக வாங்கிக்கொண்டு திரும்பி கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பாள். 


பாட்டிக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் தன்னால் முடிந்தவரை செய்வோம் என்று செய்து வருகிறாள். காலையில் சுறுசுறுப்பாக எழுந்து விடுவாள். அவள் வீட்டின் பின்புறம் கிணறு இருக்கிறது. அதில் நீரே சென்று குளித்து விடுவாள். வேப்பங்குச்சியால் பல் துலக்கி விடுவாள். பதினோரு மணிக்கு மேல் ஏதேனும் சமையல் செய்து சாப்பிடுவாள். பழைய சோறு விரும்பி சாப்பிடுவாள். சாயந்திரம் நேரந்தான் நாலு மணிக்கு மேல் முறுக்கு வியாபாரம் செய்வாள். அழகாக. ஒரே அளவாக, நல்ல ருசியாக முறுக்கு களைச் சுற்றி எடுத்து வைப்பாள். 




எல்லாவற்றிலும் ஒரு கணக்கு. தினமும் ஐம்பது முறுக்குகள், ஐந்து முறுக்கு இலவசமாக. பள்ளியிலிருந்து திரும்பி வரும் ஏழை மாணவர்களுக்கு என்று தருவாள். சனி, ஞாயிறு கிழமைகளில் ஏழு முதல் நூறு முறுக்குகள் செய்வாள். மிகவும் சுத்தமாக நேர்த்தியாக செய்யும் விதத்தையே ரசிக்கலாம் என்றிருக்கும். வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களும் பாட்டியிடம் நன்கு பேசி விளையாடி முறுக்கை பற்றி பெருமையாக சொல்லி மகிழ்வார்கள். அவர்கள் தரும் பணத்தை விட பாராட்டும், ஊக்கப்படுத்துதலும், ஆறுதலான வார்த்தைகளும் பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். 


தனக்குத் தானே பெருமையாக நினைப்பாள். ஆம். பாராட்டுக்கள். தன்னம்பிக்கை டானிக்குகள். பாட்டி வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் ஒரு குடும்பம். அந்த வீட்டுப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். பெரிய பையன். திக்குவாய் மாதிரி பேசுவான். அந்தப் பெண் பாட்டியிடம் சொல்லி வருத்தப்பட்டாள். பாட்டி தினமும் இரவு அந்த சிறுவனை வீட்டிற்கு வரவழைத்து நிறைய கதைகள் சொல்லி. அவனைக் கேள்விகள் கேட்க வைத்து, நிறையப் பேச வைத்து, மாற்றி மாற்றி, தனக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சொல்லி அவனுக்குப் பயிற்சி போல செய்து வந்தான். அவனிடம் நன்கு முன்னேற்றம் தெரிந்தது. பாட்டிக்கு அதில் மகிழ்ச்சி.


அந்த சிறுவனிடம் சொன்னாள். நீ தங்கு தடையின்றி நன்கு பேசி, நன்கு படித்து, நிறைய விஷயங்கள் கற்று கொண்டு, ஆழமாக தெரிந்து கொண்டு, சிறந்த பேச்சாளராக வர வேண்டும் என்றும் தினமும் சொல்வாள். பாட்டி வீட்டுக்கு பின்னாடி பூச்செடிகள் பல இருந்தன. அவளால் பராமரிக்க முடியவில்லை. பூக்காரி ஒருத்தி பாட்டியிடம், நான் உங்கள் வீட்டு பூக்களைப் பறித்து மாலை கட்டி அருகிலுள்ள கோயிலுக்கு தருகிறேன். எனக்கும் வருமானம் வரும். நானே தோட்டத்தைப் பராமரிக்கிறேன் என்றார். சரி என்றாள் பாட்டி. 


பாட்டி கோவிலுக்கு செல்வதில்லை. ஆனால் தினமும் காலையில் எழுந்தவுடன் கோயில் கோபுரத்தைப் பார்த்து, எல்லோருக்கும் நல்ல வழிவிடு இறைவனே என்பாள். அவ்வளவு தான். சிறு வயதில் அவளிடம் முறுக்கு வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் பெரியவர்களாகி நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் சிலர் பாட்டியை மறக்காமல் வந்து பார்த்து நலம் விசாரிப்பார்கள். பாட்டியின் எளிமையும், தொழில் நேர்மையும், வைராக்கியமும் அவர்களை வியக்க வைத்தது. 


எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண்ணும் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டாள். அவள் கணவர் வீட்டார், கணவர் வீட்டார் சமையல் சரியில்லை, அது இது சரியில்லை என்று சொல்வதை பாட்டியிடம் சில சமயம் புலம்புவாள். பாட்டி சமையல் டிப்ஸ் சொல்லி கொடுத்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித் தந்தாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம். பாட்டியை சுற்றி இருக்கும் எல்லோரும் பாட்டி நன்றாக இருக்க வேண்டும், நீண்ட நாள் இருக்க வேண்டும். நமக்கு உறுதுணையாக உற்சாகமூட்டும் நபராகவும் இருக்கிறாள் என்று அவளுக்கு தினமும் பிரார்த்தனை செய்தார்கள். பாட்டி மாதம் ஒரு முறை தவறாமல் கோயிலில் நடக்கும் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவு கதைகளுக்கு சென்று விடுவாள்.


சில விஷயங்கள் புரியும். சில விஷயங்கள் புரியாது. ஆனாலும் தவறாமல் போவாள். பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால் புத்தகங்கள் படிக்க முடியாது. நல்லதை கேட்டுக் கொள்ளலாம் என்று போவாள். இறை பக்தி பெரிதாய் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பாட்டி ஒரு நாளும் தன்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? தனக்குப் பின் இந்த முறுக்கு வியாபாரம் யார் செய்வார்கள்? இந்த குடிசை தோட்டம் யாருக்குப் போகும்? என்று ஒரு நாளும் ஒரு பொழுதும் சிந்தித்து செயல்பட வில்லை.


பக்கத்து வீட்டார், எதிர்த்த வீட்டார், பூக்காரி இன்னும் பலர் பாட்டி நாள் ஆதாயம் பெற்றாலும், பாட்டி இதனால் பயன் அடைந்தாலும் பாட்டி அதை மனநிறைவாகவும் அவர்களுக்கு உதவியாகவும் தனக்கென்று எதுவும் எதிர்பார்த்து செய்யவில்லை. மிக எளிமையாக, யதார்த்தமாக வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, தான் இருக்கும் இடத்தை, சுற்றத்தை தனக்கு வசமாக்கிக் கொண்ட முத்தம்மா போன்ற பாட்டிகள் ஏராளம் இங்கே.


வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். தன்னம்பிக்கையோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் வாழ்வை வாழும் பொழுது நம்மை அறியாமல் நம் வாழ்க்கை அடுத்தவர்களுக்கு பயணமாகி விடுகிறது. உதவி ஆகி விடுகிறது. லாப நஷ்டம் பார்க்கவில்லை. பாட்டி. வியாபாரத்திலும் வாழ்க்கையிலும். வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஆயிரம். இந்த மாதிரி தன்னலமற்ற எளிமையான மனிதர்களிடமிருந்து. ஏழ்மையிலும் எளிமையிலும். இன்றும் இறைவன் வாழ்கிறான்.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்