சென்னை: இசைப் புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இன்று அதிகாலையில், திடீர் அசவுகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை அப்பல்லோ மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிகிச்சை அளித்து வந்தது. அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதை ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று காலை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கழுத்து வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனை செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீர் அசவுகரியம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
58 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் தற்போது இசைப் புயல் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}