சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியன் 16 வயது மகள் மீரா தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளான மீரா, பிளஸ்டூ படித்து வந்தார். 16 வயதேயான இவர் இன்று அதிகாலை தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
கடந்த சில காலமாக மீரா மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தமிழறிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்தான் விஜய் ஆண்டனி. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி, சமீபகாலமாக நடித்து வருகிறார். தனது படங்களுக்கு மட்டும் தானே இசையமைத்துக் கொள்கிறார். அவரது மகளின் இந்த திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டுதான் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அந்தத் துயரச் சம்பவமே இன்னும் யாராலும் மறக்க முடியாத நிலையில் மீராவின் மரணச் செய்தி வந்துள்ளது.
தற்கொலை தீர்வல்ல
வாழ்க்கையில் தற்கொலை ஒரு தீர்வே அல்ல.. தற்கொலை மூலம் எதையுமே சாதிக்க முடியாது. உலகின் மிக மிக மோசமான கோழைத்தனம் எது என்றால் அது நிச்சயம் தற்கொலைதான். நமது வாழ்க்கையை முடித்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா.. நிச்சயம் இல்லை.
என்ன பிரச்சினையாக இருந்தாலும் மனதில் அதைத் தேக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். யாரிடமாவது ஷேர் செய்து விடுங்கள்.. வாழ்க்கை அழகானது.. அதை வாழ்ந்து அனுபவிக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோம். தயவு செய்து தற்கொலை முடிவை நாடாதீர்கள்.. அந்த எண்ணம் வந்தால் யாரிடமாவது சொல்லி விடுங்கள்.. ஷேர் பண்ணுங்க.. தேவைப்பட்டால் கவுன்சிலிங் கூட பண்ணிக்கங்க.. தவறான முடிவுகளை தேடாதீர்கள்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}