திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையிலும், மதுரையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இதேபோல கேரளாவிலும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படவில்லை. இதனால் நாளை அதாவது வியாழக்கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கோவையில் பெரும்பாலும் சவுதி அரேபியாவில் எப்போது ரம்ஜான் கொண்டாடுவார்களோ அன்றுதான் இங்கும் கொண்டாடுவார்கள். சவூதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கோவையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். இதேபோல மதுரையிலும் பலர் இன்றே ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில், அந்தத் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முஸ்லீம்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}