- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
நான் இந்தியா பேசுகிறேன்...!!
இமயத்தின் சிகரத்தில் மகுடம் சூடி,
குமரியின் அலைகளில் பாதம் நனைக்கும்,
உங்கள்... இந்தியா பேசுகிறேன்.!!
வள்ளுவன் தந்த திருக்குறள் என் கண்கள் ..!!
பாரதியின் ரொளத்திரம் என் மூச்சுக்காற்று..!!
அன்னை தெரசவின் அன்பு என் இதயம்..!!
வேலு நாச்சியார் வீரம் எனது தோள்கள்..!!
கௌதம புத்தன் பிறந்த போதி மரம் நான்..!!
மகாத்மா காந்தி நடந்த அறத்தின் வழி நான்..!!
வீரமங்கைகள் பலர் அவதரித்த கோவில் நான்..!!
யுத்தமில்லா உலகை நேசிக்கும் அமைதி புறா நான்..!!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் விந்தை நான்..!!
வேர் தேடும் உங்கள் வரலாற்றுப் பேழை நான்..!!
வெவ்வேறு மொழிகள் என் நாவில் நடனமாடும்.
வெவ்வேறு மதங்கள் என் ரத்தத்தில் சங்கமிக்கும்.
என் மடியில் தவழும் என் பிள்ளைகளே..!!
சாதி, மத பிரிவினை எனும் சாயம் பூசாதீர்கள்..!!
உழைப்பால் என்னை உலகரங்கில் உயர்த்துங்கள்.!!
உங்கள் உயிரின் மூச்சாய் என்றும் நான் இருப்பேன்..!!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
Butterflies weren't born with wings
Think Less, Live More
I AM THE HERO
WHERE TRUST LIVES....
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}