நாகப்பட்டனம்: நாகப்பட்டனம்- இலங்கை காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்த நிலையில், தற்பொழுது கனமழை பெய்து வருவதால் இந்த கப்பல் போக்குவரத்து மே 19ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டனம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய பயண கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மே 17ம் தேதி முதல் இது மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். இந்நிலையில், நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தவிர்க்க முடியாத சில சட்ட ரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகப்பட்டனம் -காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை. இந்த சேவையினை 19-5-2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதுவரை பதிவு செய்த பயணிகள் 19-5-2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}