நாகப்பட்டினம்: நாகை டூ இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து ஒரு வழியாக இம்மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இந்த போக்குவரத்து சேவையை நடத்தவுள்ள இந்த்ஸ்ரீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் என ஒரு நாளில் இரண்டு முறை இயங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கப்பலில் பயணம் செய்ய பயண கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இயற்கை சீற்றம், கட்டுப்படியாகாத பயணக் கட்டணம், கடல் கொந்தளிப்பு, குறைவான பயணிகள் போன்ற பல காரணங்களாக அக்டோபர் 20ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மே 17ம் தேதி முதல் இது மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். ஆனால் கப்பல் போக்குவரத்து கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
இப்படி 2 முறை தொடங்கியும், அறிவித்தும் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. நாகை டூ இலங்கை காங்கேசன் துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை டூ காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் மாதம் 16ம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, இந்த சேவையை நடத்தவுள்ள இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட உள்ளது. சிவகங்கை என்கிற பயணிகள் கப்பல் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. பயணத்திற்கான முன்பதிவு இன்று (12.08.24) நள்ளிரவு 12 மணிக்கு www.sailindsri.com என்ற இணையதள மூலமாக முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. புக் செய்திருந்தால் அந்த கட்டணம் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}