நாகப்பட்டினம்: நாகை டூ இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பிப்., 22ம் தேதி மீண்டும் தொடக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் என ஒரு நாளில் இரண்டு முறை இயங்க திட்டமிடப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள் இந்த கப்பல் சேவை செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் இந்த மாதம் 22ம் தேதி தெடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இரு மார்க்கத்திலும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டமும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}