சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மதுப்பழக்க வழக்கம்தான். இதில் தமிழக அரசு எந்த கவனமும் செலுத்துவது இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கும், ராணுவ வீரர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், சென்னை எழும்பூரில் ஆபரேஷன் சிந்தூர் பேரணி நேற்று நடைபெற்றது.இதில்
டாக்டர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று திருச்சியில் ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக பேரணி நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது,
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நேற்று சென்னையில் பேரணி வைத்திருந்தோம். அதற்காக பத்தாயிரம் பேர் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து இன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதோடு மாவட்ட தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.இதில் எல்லோருமே கலந்து கொள்ள வேண்டும் என நாங்கள் சொல்லி இருக்கிறோம். இதில் கட்சி பாகுபாடு இன்றி பாஜக கொடி எங்கேயும் கட்டப் போவதில்லை. எங்கேயும் பிரதமரின் படத்தை தவிர வேறு யாருடைய படமும் இருக்காது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் அமைதியான முறையில் தேசியக் கொடியேந்தி ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்
பொள்ளாச்சி தீர்ப்பை பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. இன்று பத்திரிக்கையை பார்த்தால் கொலை கொள்ளை வழக்கு, மதுப்பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் கடந்த ஆண்டை விட 52% எல்லா குற்றங்களும் அதிகரித்துள்ளது.
இதற்கு அடிப்படை காரணம் மதுப்பழக்க வழக்கம்தான். தமிழக அரசாங்கம் எந்த கவனத்தையும் செலுத்துவதில்லை. தமிழக அரசாங்கம் முழுக்க முழுக்க இதற்கு காரணமாக இருக்கிறது.எங்களைப் பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}