சென்னை: 22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் எப்போது பதற்றமான சூழல் வந்தது இல்லை. திமுக என்று எங்களை ஆதரித்து பேசினாங்க. 1999ல் எங்களை ஆதரித்து பேசினாங்க. அதன்பின்னர் திமுகவினர் எங்களை ஆதரித்து பேசவில்லை. இனிமேல் பேசுவாங்களா என்பதும் மாநாடு முடிந்து தான் தெரியும். நாங்கள் வலிமையோடு இருப்பதை தெரிந்து தான் இந்த கூட்டணி மோசம், இந்த கூட்டணி சரியில்லை, இது துரோகக் கூட்டணி என்று பேசுகின்றனர். நாங்கள் வலிமையாக இருப்பதால் தான் அவர்கள் எங்களைப் பற்றி பேசுகின்றனர்.
ஊடகங்களும் எங்களை தான் கேள்வி கேட்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் எங்களிடம் கூட்டணி குறித்து கேட்கின்றீர்கள். விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. பக்தர்களுக்கான மாநாடு. முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.

இந்த முருகன் மாநாட்டிற்கு உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருவதாக உள்ளது. ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் மாநாட்டில் கலந்து கொள்கிறார். மேடையில் தலைவர்கள் மட்டும் இருப்பார்கள். அரசியல் கருத்துக்கள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. முருகர் பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம். நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம்.2026ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}