பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்பட நடிகரான நானா படேகர் (1951 - 2026) காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:
நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தி மற்றும் மராத்தி சினிமாவுக்கு நடிகர் நானா படேகர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது; தனித்துவம், அசைக்க முடியாத ஆளுமைப் பண்புகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் நானா படேகர்; அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் பல தலைமுறைகளை கடந்து நினைவில் நிற்கும்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்:

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நண்பர் அன்பிற்குரிய நானா படேகர் இனி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நானா படேகர் குடும்பத்தினருக்கும், அவரது அன்பிற்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நானா படேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு சுந்தர் இரங்கல்:
நடிகையும், பாஜக மாநில துணைத்தலைவருமான குஷ்பு சுந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இது நம்ப முடியாத அதிர்ச்சியாக உள்ளது; என்னால் எதையும் உணர முடியவில்லை; மிகுந்த வேதனையில் உள்ளேன்; சிறந்த நடிகர், தனக்கென சொந்த சிந்தனைகளும் நம்பிக்கைகளும் கொண்டவர்; எளிமையான மனம் கொண்ட மனிதர்; அவருடன் பணியாற்றும் பாக்கியமும் பெருமையும் எனக்குக் கிடைத்தது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் தனித்துவமான சாதனை:
இந்திய சினிமாவில் தனது அழுத்தமான நடிப்பினாலும், தனித்துவமான உரையாடல் உச்சரிப்பினாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் நானா படேகர். பல்வேறு தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ள இவர், மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டவர். மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் பல தசாப்தங்களாகத் தனது முத்திரையைப் பதித்த இவர், சமூகப் பணிகளிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார்.இவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
பாட்டியானாலும் பிரச்சினை!
{{comments.comment}}