"எம்ப்டி"யாக காணப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியம்.. பிசிசிஐ அதிர்ச்சி!

Oct 05, 2023,04:26 PM IST

அகமதாபாத்: இந்தியாவின் மிகப் பிரமாண்டமான ஸ்டேடியமாக வர்ணிக்கப்படும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியம் இன்றைய உலகக் கோப்பையின் முதல் போட்டியின் போது காலியாகக் கிடந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


சாதாரண  போட்டித் தொடராக இருந்தால் கூட பரவாயில்லை. இது உலகக் கோப்பைப் போட்டி. அதுவும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் உலககக் கோப்பைப் போட்டி. அப்படி பல  பெருமைகள் இருந்தும் கூட இன்றைய போட்டியின்போது ஸ்டேடியம் காலியாகக் கிடந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.




2023 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. வழக்கமாக தொடக்க விழா நடைபெறும். ஆனால் இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. நேராக போட்டிக்குப் போய் விட்டனர். அதுவே ரசிகர்களை முதலில் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது.


இந்த நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியைக் காண விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ரசிகர்கள் வந்திருந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.  முதல் போட்டியில் இந்தியா இல்லை என்பதாலும் பரபரப்பான  போட்டியாக இது இருக்காது என்ற எதிர்பார்ப்பாலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் டிக்கெட்கள் விற்கவே இல்லை. இதையடுத்து இலவசமாக டிக்கெட் தருகிறோம் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து கூட்டம் சேர்த்துள்ளது குஜராத் கிரிக்கெட் சங்கம். இலவச டிக்கெட்டோடு டீ, சாப்பாடும் கூட கொடுத்துள்ளனர். அதுவும் இலவசம்தானாம்.


உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமை படைத்தது நரேந்திர மோடி ஸ்டேடியம். இதில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உட்கார முடியுமாம். இப்படிப்பட்ட ஸ்டேடியம் காற்று வாங்க காலியாகக் கிடந்தது பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. டிவிட்டரில் இதை வைத்து பலரும் டிரோல் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படி ஒரு உலகக் கிரிக்கெட் போட்டி நடந்ததே இல்லை. இப்படியா சொதப்புவீர்கள் என்று பலரும் கிண்டலடித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்