- வர்ஷினி
சென்னை: டைகர் நாகேஸ்வர ராவ் என்ற தெலுங்கு திரில்லர் படத்தில் கஜ்ஜாலா ராவ் என்ற வித்தியாசமான கேரக்டரில் கலக்குகிறார் நாசர்.
தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் கலக்கலான நடிப்பைக் கொடுத்து வருபவர் நாசர். குறிப்பாக பாகுபலி படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் வியந்து பாரட்டப்பட்டது.
இந்த நிலையில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் முக்கிய வேடத்தில் நாசர் வருகிறார். கஜ்ஜாலா ராவ் என்ற கேரக்டரில் நாசர் நடிக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. மும்பையில் இது கோலாகலமாக நடைபெறவுள்ளது.
வம்சி எழுதி இயக்கியுள்ள படம்தான் டைகர் நாகேஸ்வரர ராவ். அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ளார். ரவி தேஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுபம் கெர், ரேனு தேசாய், நூபுர் சனோன், ஜிஸ்ஸு செங்குப்தா, காயத்ரி பரத்வாஜ், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
70களின் கதைப் பின்னணியில் அமைந்த திரில்லர் கதை இது. ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் நடந்த சம்பவங்களை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. டைகர் நாகேஸ்வரராவ் என்ற திருடனையும், அவன் மேற்கொள்ளும் சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் கதையாகும். படத்தின் கதையை வித்தியாசமாக கையாண்டுள்ளனராம்.
திருடன் போலீஸ் கதைதான் என்றாலும் கூட அதை வித்தியாசமான முறையில் திரைக்கதையாக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து காத்திருப்பதாக இயக்குநர் வம்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}