டெல்லி: 2001ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இந்தியர்கள் மறக்க முடியாத கருப்பு தினம் அது. அதுவரை எங்கெங்கோ தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகள். நாடாளுமன்றத்தையே தொட்ட கொடும் தினம். 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் புகுந்தனர். டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 6 போலீஸார், 2 நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு காவலர்கள், ஒரு தோட்டக்காரர் ஆகியோரை சுட்டுக் கொன்று விட்டு நாடாளுமன்றத்திற்குள் புக முயன்றனர். அவர்கள் ஐந்து பேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று பின்னர் தெரிய வந்தது.
அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய், துணைப் பிரதமராக எல்.கே. அத்வானி இருந்தார். தீவிரவாதிகள் தாங்கள் வந்த காரை, குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் கார் மீது மோதி நிறுத்தி விட்டுத் தாக்குதலில் குதித்தனர்.
தீவிரவாதிகளை முதலில் பார்த்து குரல் கொடுத்து காவலர்களை உஷார்படுத்தியவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி என்ற பெண் காவலர்தான். இதையடுத்து அவரை முதலில் சுட்டுக் கொன்றனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்தான் ஊடுறுவியிருந்தனர். பாதுகாவலர்கள் சுட்டதில் ஒரு தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்து அவன் சிதறினான்.
இந்த அதி பயங்கரவாத சம்பவத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. 9 பேர் பலியானதுடன், 17 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவு நாள் இன்று நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த தியாகிகள் 9 பேரின் படங்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். எம்.பிக்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவீட்டில், 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் மிகவும் தீரத்துடன் போராடி தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை நாம் நினைவு கூர்ந்துள்ளோம். அவர்களது வீரமும், தியாகமும் நமது நாட்டு மக்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}