டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜெகதீப் தங்கர் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம். மாபெரும் மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. நமது சக்தி, திறமை, பங்களிப்பை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. நாம் நமது காலத்தில் வாழ ஆரம்பித்துள்ளோம். நாம் கனவு கண்ட சாதனைகள், வளர்ச்சியை இந்தக் காலத்தில் நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் ஜெகதீப் தங்கர்.
காங்கிரஸ் பங்கேற்கவில்லை
தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை. விழாவுக்கு மிகவும் தாமதமாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 75 வருட வரலாறு தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் கூடும் இக்கூட்டம் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}