டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அவர்கள் தரப்பு வாதத்தை கேட்க உரிமை இருப்பதாக கூறினார். எந்த நிலையிலும் கருத்து கேட்கும் உரிமை என்பது நியாயமான விசாரணைக்கு உயிர் போன்றது என்று நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 8-ம் தேதி நடைபெறும்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி 2014 ஜூன் 26-ல் அளித்த புகாரின் அடிப்படையில், 2021-ல் அமலாக்கத்துறை இந்த வழக்கை தொடங்கியது. சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரூ.2,000 கோடி மதிப்பிலான Associated Journals Limited (AJL) சொத்துக்களை Young Indian என்ற நிறுவனம் மோசடியாக கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு. இதைத்தான் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை, Young Indian மற்றும் AJL நிறுவனங்களின் பங்கு விவரங்கள், பண பரிவர்த்தனைகள் மற்றும் முக்கிய நபர்களின் பங்கு பற்றி அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
Young Indian நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம், AJL சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்துக் கூறுகையில், நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்வது சட்டத்தின் ஆட்சி போல் காட்டப்படும் அரசு ஆதரவு குற்றச் செயலாகும் என்று கூறியுள்ளார்.
Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்
3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்
பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!
வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!
என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!
பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!
வாழ்த்து மழையில் நனையும்.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!
{{comments.comment}}