தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்.. எண்ணெய்க்கும்.. எப்பேர்ப்பட்ட பூ தெரியுமா.. தாமரை!

May 09, 2024,05:36 PM IST

- சந்தனகுமாரி


எத்தனையோ பூக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு ஸ்பெஷல்தான்.. அந்த வகையில் தாமரைப் பூவும் சிறப்பான பூக்களில் ஒன்று. 

பூவுலகில் தனக்கென ஓர் தனி இடத்தை பிடித்த தாமரை  நீர்வாழ் தாவரமாக பல்லாண்டு வாழக்கூடியது. காலையில் மலர்ந்து இரவில் குவியும் தாமரை தூய்மைக்கும், நறுமணத்திற்கும், அழகுக்கும் பெயர் பெற்றது. கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மகாலட்சுமியும் அமர்ந்திருக்கும் தாமரை இந்துக்களின் புனிதமான மலர் ஆகும். பார்ப்பதற்கே சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய இந்த மலர் ஆயுர்வேதத்திலும் முன்னுரிமை வகிக்கிறது.


தாமரை ஆழமற்ற நீரில் பறந்து விரிந்த இலைகளுடன் நறுமண பூக்களுடனும் வாழும் தன்மை கொண்டது. இது குளங்கள், ஏரிகள் போன்ற வற்றாத நீர் நிலைகளில் அதிகமாக வாழும். பாரம்பரிய மருத்துவத்தில் தாமரை தனக்கென்று பெயர் பெற்றது. தாமரையில் பல வகைகள் உண்டு. ஆனால் இந்தியாவை பொருத்தமட்டில் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களில் தான் பெரும்பாலும் தாமரைகள் இருக்கின்றது.


பேருந்துகளில் பயணிக்கும் பொழுது வயல்வெளி, குளங்களின் அருகாமையில் செல்லும்பொழுது அந்த இயற்கையான காற்றும், குளங்களில் இருக்கும் தாமரை பூவும் அழகாக இருக்கும். சூரிய உதய நேரத்தில் தாமரைப்பூ மலர ஆரம்பிக்கும் தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அமைதியான சுற்றுச்சூழலில் மெல்ல மெல்ல அசைந்து ,மென்மையான நிறங்களுடனும் நம்முடைய கண்களுக்கு காட்சி தருகிறது. அது மலரும்போது பலரும் வந்து தாமரை பூக்களை பறித்துக் கொண்டு இருப்பார்கள். சேற்றிலும், களிமண்ணிலும் வளர்ந்தாலும் தூய்மையின் அடையாளமாக தான் இருக்கிறது தாமரை.  சேற்றில் வளர்ந்தாலும் அது தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது. 


தாமரை மொட்டு இன்னும் அழகானது.. மொட்டின் அழகு மட்டுமல்ல, அதன் நறுமணமும் வேற லெவலில் இருக்கும்.  தாமரையில் பல நன்மைகள் உள்ளன.. வாங்க பார்க்கலாம்.


தாமரை விதை:




தாமரை விதை செரிமானத்தில் முக்கிய பங்கு  வகிக்கின்றது. அதில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதில் காணப்படும் பொட்டாசியம் தாது உடலில் ரத்த அழுத்த அளவை சீராக்கி இதயத்தை மேம்படுத்த உதவுகிறது. அவரை விதைகள் நம்முடைய முதுமை தோற்றத்தை தடுத்து சருமத்திற்கு இளமையும் ,புற்றுணர்வையும் தருகிறது.


தாமரை விதை நம்முடைய வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவர தாமரை விதையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். 100 கிராம் தாமரை விதையில் 10 கிராம் புரதச்சத்து நிரம்பி உள்ளது .மேலும் இது மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.


தாமரை இலை:




தாமரை இலைன்னு சொன்னது என்ன தெரியுமா ஞாபகம் வருது.. எப்பவுமே மல்லிப்பூ, பிச்சிப்பூ பூஜைக்கு ஏற்ற பூக்கள் வாங்கினாலும் அதை தாமரை இலையில் தான் வைத்து தருவாங்க. நம்மைப் பொறுத்த வரைக்கும் அது ஒரு ஸ்பெஷல் என்று சொல்லலாம். தாமரை இலையில் வைத்து தரும் பூக்களுக்கு தனி நறுமணம் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களிலிருந்து மீன், இறைச்சி அனைத்துமே தாமரை இலையில் தான் வைத்து தருவாங்க. ஒரு இலை ஒரு ரூபாய் தான். பிளாஸ்டிக் க்கு தடை அமல்படுத்துன பிறகு அனைத்துமே தாமரை இலையில் தான் நமக்கு வைத்து தராங்க. தாமரை இலை வர்த்தகம் உயர்ந்துள்ளது. எனவே தாமரையின் இலையும் வீண் போவதில்லை, மவுசாகத்தான் இருக்கிறது.


தாமரை தண்டு:




தாமரை  தண்டை சாப்பிடலாம். அதுவும் பச்சையாகவே சாப்பிடலாம்.  அசுத்த நீரில் வளர்ந்தாலும் மாசற்றது. அதேபோல அதனுடைய தண்டும் சுத்தமாகத்தான் இருக்கும். தாமரை தண்டை நன்கு கழுவி தோலை சீவி வட்டம் வட்டமாக நறுக்க வேண்டும். உடன் உப்பு ,வத்தல் பொடி, கான்பிளவர் மாவு ,கடலை மாவு அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு வறுத்து சாப்பிட வேண்டும். அவ்வளவு ருசியாக இருக்கும். 


நாம் எவ்வளவு உப்பு போட்டாலும் கூட, சாப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால் தாமரை தண்டு அதிக உப்பு ஏற்றுக் கொள்ளாது.


தாமரை வேர் கிழங்கு:


தாமரை வேர் இரத்த ஓட்டத்தை சரி செய்ய உதவுகிறது. தாமரை வேரில் தாமிரம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் அது ரத்த சிவப்பணுக்களை உருவாக்க பயன்படுகிறது. ரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகிறது. வேர் செரிமானத்திற்கும் பெரிதளவில் உதவுகிறது. மன ஆரோக்கியத்திற்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் ,சுவாச பிரச்சனைக்கும் தாமரை வேர் பயனுள்ளதாக உள்ளது.


ரத்தப் போக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. தாமரை வேர் கிழங்கை அவித்து அப்படியே சாப்பிடலாம். பொரியல் செய்தும் சாப்பிடலாம்.


தாமரை பூ:




தாமரை பூ பற்றி சொல்வதற்கு வார்த்தைகளை இல்லை. அதனுடைய பயன்பாடுகள் அவ்வளவு அதிகம் இருக்கிறது. கோயில் விசேஷங்களிலும், திருமண வைபவங்களிலும், முன்னுரிமை வகிக்கின்றது.  தாமரை பூ உடல் உஷ்ணங்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. பூவை சிரப் செய்தும் குடிக்கலாம். அந்த சிரப் இந்த கோடையில் நம்மை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். 

தாமரைப்பூவில் தலைவலி தைலம் செய்யலாம். தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தாமரைப்பூ ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அதேசமயம், உடலில் சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் இதை உண்ணக்கூடாது. காய்ச்சல் ஏற்படும் போது தாமரை பூ தேநீர் போட்டு அருந்தலாம். உடனடியாக சரியாகும்.


நம்முடைய உடலில் கல்லீரல் பாதிப்பு வந்தால் நமக்கு தொடக்கத்தில் தெரியாது. அது முத்திய பிறகு தான் வெளிப்படும். லட்சக்கணக்கில் மருத்துவமனைகள் வந்தாலும் கல்லீரல் பாதிப்பு பிரச்சனையை சரி செய்ய இயலவில்லை. காலம் காலமாக கல்லீரல் பிரச்சனையால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாமரை கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்க பயன்படுகிறது. அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் குணம் தாமரைக்கு உள்ளது.


ஆகவே இனியும் தொட்டதற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கையான முறையில் நமக்கு கிடைக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவில் கிடைக்கிறது. தாமரைப்பூ, விதை, தண்டு ஏதேனும் கிடைத்தால் அவற்றை உணவில் வைத்து உட்கொள்வோம். மருத்துவ பயன்பாடுகள் நிறைந்த தாமரையை பற்றி மற்றவர்களிடமும் எடுத்துக் கூறுவோம்.


(குறிப்பு: உரிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு இயற்கை உணவு, மூலிகை உணவு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது நல்லது)

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்