சிட்னி: தைவான் நாட்டுடனான உறவை துண்டிப்பதாக நவ்ரு தீவு அறிவித்துள்ளது. தைவானை விட்டு விலகிய கையோடு சீனாவுடன் உறவை அது புதுப்பித்துக் கொண்டுள்ளது.
பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிக மிக சிறிய தீவுதான் இந்த நவ்ரு. இதுவரை தைவானுடன் அது உறவு வைத்திருந்தது. தற்போது அதைத் துண்டித்து விட்டு சீனாவுடன் உறவு வைப்பதாக அறிவித்துள்ளது. சீனாவை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அந்த தீவு நாடு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நவ்ரு தீவின் அதிபரான டேவிட் அடியாங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். இனிமேலும் நாம் தைவானை தனி நாடாக கருதத் தேவையில்லை. மாறாக சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அதை நாம் பார்க்கிறோம். சீனாவை தனி நாடாக அங்கீகரிக்கிறோம். தைவானுடன் இனியும் எந்த உறவையும் நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள வெகு சில நாடுகளில் நவ்ருவும் ஒன்று. தற்போது நவ்ரு அதிலிருந்துத விலகியுள்ளது தைவானுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது மொத்தம் 12 நாடுகள்தான் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நவ்ரு நாடானது மிக மிக குட்டித் தீவு நாடாகும். மொத்தமே 12,500 பேர்தான் அந்த நாட்டில் வசிக்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு இப்படித்தான் சாலமன் தீவு நாடும் தைவானை விட்டு விலகி சீனா பக்கம் வந்தது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் எஸ்ட்வானா, லத்தீன் அமெரிக்காவில் பெலிஸ், குவாத்திமாலா, ஹைத்தி, பராகுவே ஆகிய நாடுகள் தைவானை அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
{{comments.comment}}