நவராத்திரி விழா.. கர்பா டான்ஸ் ஆடிய 17 வயது சிறுவனுக்கு மாரடைப்பு..!

Oct 22, 2023,01:37 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் நடந்த நவராத்திரி விழா கர்பா நடன நிகழ்ச்சியின்போது 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நவராத்திரி விழா வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக குஜராத்தில் தாண்டியா நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல கர்பா நடனமும் அங்கு புகழ் பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு கர்பா நிகழ்ச்சியின்போது பலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


குஜராத் மாநிலம் கேடா மாவட்டம், கபடாவஞ்ச் என்ற பகுதியில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பலரும் கலந்து கொண்டனர்.  அப்போது வீர் ஷா என்ற 17 வயது சிறுவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து விட்டான். உடனடியாக அவனை அங்கிருந்த தன்னார்லவர்கள் ,முதலுதவி கொடுத்தனர். சிபிஆர் கொடுத்துப் பார்த்தனர். ஆனாலும், சிறுவன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு  அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீர் ஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.




17 வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.  இந்த சம்பவம் நடந்தபோது வீர் ஷாவின் பெற்றோரான ரிபல் ஷா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அதே பகுதியில் வேறு ஒரு இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வீர் ஷா மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்களுக்கு விஷயம் தெரிந்து அலறி அடித்து மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.


இந்த சம்பவம் குறித்து ரிபல் ஷா கூறுகையில், கர்பாவில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருங்கள். அதீதமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். தொடர்ந்து விளையாடாதீர்கள். ஓய்வெடுங்கள். எனது பிள்ளையை நான் இழந்து விட்டேன். இது யாருக்கும் நடக்கக் கூடாது என்றார் அவர்.


குஜராத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கர்பா நடன நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் இது நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இடை விடாமல் கர்பாவில் கலந்து கொண்டு ஆடுவதால்தான் இப்படி நடப்பதாக டாக்டர்கள்  கூறுகின்றனர். பல மணி நேரம் தொடர்ந்து கர்பா நடனம் ஆடுவது நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


ஆனால் நவராத்திரி விழாவின்போது தொடர்ச்சியாக கர்பா நடனங்கள் நடைபெற்றபடி இருக்கும். அதில் பலரும் கலந்து கொண்டு உற்சாக மிகுதியால் இடைவிடாமல் ஆடிக் களிக்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளில் போய் முடிவதாக கூறப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்