இந்த பிரபஞ்சமே மிக அழகான பிரமாண்டமான நாடகம் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை.. கண்ணுக்கு காட்சியளிக்கும் அனைத்துமே மாயா சக்தி! கண்ணுக்கு புலனாகாத அனைத்துமே சிவம் என்று கூறப்படுகிறது.. இந்த சக்தியின் மூலம் சிவம்..
ஒவ்வொரு ரூபமும் ஐம்பூதங்களின் எண்ணற்ற சேர்க்கைகள் (Combinations) எவ்வளவு விதமான படைப்புகள்.. எவ்வளவு நிறங்கள்.. எவ்வளவு உருவங்கள், எவ்வளவு சிறிய படைப்புகள் (Micro) எவ்வளவு பிரமாண்ட படைப்புகள்.. மண்,நெருப்பு,காற்று, ஆகாஷ் மற்றும் நீர் இவைகளின் எண்ணற்ற சேர்க்கைகள் இந்த உருவங்களை உருவாக்குகின்றன.. மனிதன் இதை ஆராய்ந்து பகுத்துப்பார்க்கும் முறையை கற்றான் அன்றி.. இவற்றின் மூலத்தை பார்க்க முடியவில்லை.. மனிதனின் படைப்புகள் அனைத்தும் இயற்கையை பார்த்து பார்த்து உருவாக்கியதே. மனித உருவமும் பஞ்சபூதத்தின் கலவையே.. ஒவ்வொரு மனித உருவமும் வெவ்வேறு காம்பினேஷன்.. எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.. அதனால்தான் மரபு மருத்துவ முறைகள், மனிதனின் இந்த காம்பினேஷனை அறிந்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கக்கூடியதாக உள்ளன..
இந்த பிரபஞ்ச சக்தியை எவ்வளவு ஆராய்ந்தாலும்.. நாம் பத்தாயிரம் பிறவிகள் எடுத்தாலும் முழுமையாக அறிந்து கொள்ள இயலாது.. மற்றும் படைப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது…புதுப்புது விஷயங்கள் வந்து கொண்டே உள்ளது.. இந்தப் படைப்பு விளையாட்டாக நடந்து கொண்டே இருக்கிறது..God is learning too!
இந்த பிரபஞ்சத்தை பார்க்க பார்க்க நம் மனது சந்தோஷத்தில் திளைக்கிறது.. உண்மைதானே?
இந்த சக்தியை, இந்த ஐம்பூதங்களை வழிபடாது.. நன்றி உணர்வு நம் மனத்தை முழுமையாக ஆட் கொள்ளாது.. படைப்பின் மூலத்தை அறிந்து கொள்வது அரிது..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
அப்போது காஷ்முஷ் ஒரு முனிவராக இருந்தார்.. அவர் சிவனை நோக்கி தவம் புரிந்தார்.. தவம் புரியும் முனிவர்களுக்கு ஒரு எண்ணம்.. சிவனை மட்டுமே வழிபடுவேன் என்று.. அதனால் காஷ்முஷ் பூஜை முடித்துவிட்டு சிவன் சக்தி உருவங்களுக்கு முன்னால் சிவனை மட்டும் வலம் வருவார்..
சிவனுக்கு அவருடன் விளையாடி பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தது.. சிவன் என்ன செய்தார் சக்தியை தனக்கு மிகவும் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.. அப்போதும் காஷ்முஷ் அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று சிவனை மட்டும் வலம் வந்தார்..
சிவனுக்கு தாங்க முடியவில்லை சிரிப்பு.. பிறகு என்ன செய்தார்.. சக்தியை தன் மடி மீது அமர்த்தி கொண்டார்.. இப்போதும் காஷ்முஷ் அவர் மடி மீது ஏறி சென்று சிவனை மட்டும் வலம் வந்தார்..
சிவனுக்கு இப்போது மகா சிரிப்பு.. பிறகு என்ன செய்தார்? சக்தியை தன் உடம்பில் ஒரு பாகம் ஆக்கிக் கொண்டார்.. அதுதான் அர்த்தநாரீஸ்வரர் உருவம்.. இப்போது வேறு வழியே இல்லை.. காஷ்முஷ் இருவரையும் வலம் வந்தார்.. அத்துடன் சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்றும் உணர்ந்தார்.
இது கதை ஆனால் கூட இது உணர்த்தும் உண்மை என்னவென்றால்.. சிவனும் சக்தியும் இணைந்ததுதான் இந்த பிரபஞ்சம்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து அதை பார்த்து ரசிப்பது சிவம்..
தியானத்தில் நாம் உணர்வது என்ன என்றால் நாம் எப்போது பார்ப்பவனாக (Awareness) ஆகிறோமோ, அப்போது சிவத்தை உணர்கிறோம் ( Same as being Sivam). நாம் முழுமையாக ஒரு காரியத்தை செய்யும் போது, அந்த காரியமாகவே ஆகிவிடும் போது நாம் சக்தியாக இருக்கிறோம்.. நாம் ஒரு உணர்வு கொள்ளும் போது இந்த உணர்வாகவே மாறிவிடுவதும் சக்தியின் நிலை.. காரியங்களாற்றும் போதும்,உணர்வு நிலை கொள்ளும்போதும் நாம் பார்க்க ஆரம்பித்தோம் ஆனால்.. சக்தியையும் தீன் சக்தியின் மூலத்தையும் உணர முடியும்..
இதை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் பெரிய வாய்ப்பு..
இந்த நவராத்திரி திருநாளில்.. மாயா சக்தியான அன்னையின் அளப்பரிய அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்..
நாம் தொடர்வோம்..
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை
Gold rate.. தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.. பெரும் கவலையில் பெண்களைப் பெற்றோர்!
அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்.. அதுதான் அவருக்கு நல்லது.. ராஜேந்திர பாலாஜி
மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?
நவராத்திரி 2ம் நாள் வழிபாடு .. இன்று என்ன கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்!
நவராத்திரி திருவிழா.. பராசக்திக்கான 9 நாட்கள்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து ரசிப்பது சிவம்!
{{comments.comment}}