சிறையில் வாடும் சித்து.. புற்றுநோயுடன் தவிக்கும் மனைவி.. உருக்கமான கடிதம்!

Mar 24, 2023,04:47 PM IST
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்  வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்து தற்போது கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988ம் ஆண்டு குர்நாம் சிங் என்பவருடன் நடந்த மோதலில் அவரை அடித்துக் கொன்று விட்டார் சித்து. அந்தக் கொலை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்ட், சித்துவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்துவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் கெளர்.  அவருக்கு 2வது நிலை புற்றுநோய் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான அனைவரையும் மன்னித்து விடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்காக காத்திருக்கும் வேதனையை விட பெரியது எதுவும் இல்லை. உங்களது வலியை எடுத்துக் கொண்டு அன்பைப் பகிர ஆசையாக உள்ளேன். புற்றுநோய் வந்துள்ளது. மோசமானதுதான். ஆனால் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விட்டது. 

உங்களுக்கான நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களை சோதனையிலிருந்து மீட்கும்.  எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. யாரையும் குறை சொல்லமுடியாது. இது கடவுளின் திட்டம் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் கெளர் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்