"15 செகன்ட் போதும்".. பாஜக பெண் தலைவர் சவால்.. "முடிஞ்சா செய்யுங்க".. ஓவைசி பதில் சவால்!

May 09, 2024,05:37 PM IST

ஹைதராபாத்: முன்னாள் நடிகையும், முன்னாள் சுயேச்சை எம்.பியும் தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருபவருமான நவ்னீத் ரானா, எங்களுக்கு 15 செகன்ட்  கொடுத்துப் பாருங்க.. என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க என்று ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு சவால் விடுத்துள்ளார். முடிஞ்சா செஞ்சு பாருங்க, நாங்க ரெடி என்று பதிலுக்கு ஓவைசியும் சவால் விட்டுள்ளார்.


நவ்னீத் ரானா முன்னாள் நடிகையாவார். கருணாஸுக்கு ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் நடித்தவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் இப்போது அரசியல்வாதியாக இருக்கிறார். பாஜகவில் இணைந்து செயல்படுகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் அவர் பாஜக வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்தத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசி போட்டியிடுகிறார். இவரது தம்பியான அக்பருதீன் ஓவைசி, கடந்த 2013ம் ஆண்டு பேசும்போது, 15 நிமிடம் போலீஸாரை வர விடாமல் தடுத்து வையுங்கள். எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறோம் என்று பேசியிருந்தார். அதைச் சுட்டிக் காட்டி ஹைதராபாத் கூட்டத்தில் சவால் விட்டார் நவ்னீத் ரானா.


அவர் பேசும்போது, இங்கு போட்டியிடும் வேட்பாளரின் தம்பி முன்பு சொன்னார். 15 நிமிடங்களுக்கு போலீஸாரை விலக்குங்க.. நாங்க யார்னு காட்றோம் என்று. தம்பி உங்களுக்குத்தான் 15 நிமிஷம் தேவை.. எங்களுக்கு 15 செகன்ட் போதும்..


காங்கிரஸுக்கோ அல்லது ஓவைசிக்கோ போடும் ஓட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவது போல. அந்தத் தப்பை மட்டும் ஹைதராபாத் மக்கள் செய்து விடாதீர்கள். நிச்சயம் மாதவி லதா வெல்வார், பாகிஸ்தானாக ஹைதராபாத் மாறுவதை தடுத்து நிறுத்துவார்.


காங்கிரஸ் மீதும், மஜ்லிஸ் கட்சி மீதும், ராகுல் காந்தி மீதும் பாகிஸ்தான் பாசம் காட்டுகிறது. பாகிஸ்தான் காட்டும் சிக்னலுக்கேற்பதான் காங்கிரஸ் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்து வந்தது. அது இப்போது நாடு முழுவதும் கட் ஆகி விட்டது. ஹைதராபாத்தும் விரைவில் பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுபடும் என்றார் அவர்.


முடிஞ்சா பண்ணுங்க பார்ப்போம்.. ஓவைசி பதில் சவால்


இதற்கிடையே, நவ்னீத்தின் சவாலுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடிக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.. நவ்நீத்தை பிரதமர் அனுமதிக்க வேண்டும். அவருக்கு அந்த 15 விநாடிகளைக் கொடுக்கட்டும். அவரால் என்ன செய்து விட முடியும். அவருக்கு தாராளமாக டைம் கொடுங்க. பிரதமர் உங்களுடைய ஆள்தான், ஆர்எஸ்எஸ் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. செஞ்சு பாருங்க.. உங்களால் என்ன முடியுமோ தாராளமா பண்ணுங்க.. உங்களிடம் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கிறதா என்று பார்த்து விடுவோம். யார் பயந்தா.. நாங்களா பயந்தோம்.. எங்க வரணும்னு சொல்லுங்க நாங்க வர்றோம். பகிரங்கமாக அவர் பேசியுள்ளார். அவர் சொன்னதை செய்ய வேண்டும். அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார் ஓவைசி.


ஓவைசியின் கோட்டை ஹைதராபாத்




ஹைதராபாத் தொகுதி கடந்த 1984ம் ஆண்டு முதலே ஓவைசி குடும்பத்திடம்தான் இருக்கிறது. 84 வரை சலாஹுதீன் ஓவைசி இங்கு ஜெயித்து வந்தார். அதன் பிறகு 2004ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை அசாதுதீன் ஓவைசி ஜெயித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தத் தொகுதியில் பாஜக இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. 2019 தேர்தலில் இங்கு பகவந்த் ராவ் என்பவரை பாஜக நிறுத்தியது. ஆனால் அவரோ 2 லட்சத்து 36,000 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஓவைசியோ, 5 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட  7 சட்டசபைத் தொகுதிகளில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மே 13ம் தேதி தெலங்கானாவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதே தேதியில் ஆந்திர மாநிலத்திலும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்