நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் முக்கியமான நாளாகும். வழக்கமாக நவராத்திரி என்றாலே ஒன்பது நாட்கள் வழிபாடு தான். ஆனால் இந்த ஆண்டு பத்து நாட்கள் நவராத்திரி வழிபாடு அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் மகேஸ்வரி வடிவத்தை வழிபட்டதை போல், நவராத்திரியின் இரண்டாம் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை, எந்த முறையில், என்ன நைவேத்தியம் படைத்த வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக துர்கை அம்மனை வழிபடுவதற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மிகவும் ஏற்றதாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் இரண்டாம் நாள் துர்கைக்குரிய செவ்வாய்கிழமையிலேயே அமைந்துள்ளது. இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். துர்கையை வழிபடுவதால் மனதில் தைரியம், தெளிவு ஆகியவை பிறக்கும். துன்பங்கள் விலகும்.

அம்பாளின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
கோலம் - கட்டம் வகை கோலம்
மலர் - முல்லை
இலை - மருவு
நைவேத்தியம் - புளியோதரை
தானியம் - வேர்க்கடலை சுண்டல்
பழம் - மாம்பழம்
ராகம் - கல்யாணி
நிறம் - மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம் :
"ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நமோ நமஹ"
இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது தைரியம், அமைதி, செல்வ வளம், மற்றும் இழந்த பதவியையும் செல்வத்தையும் மீண்டும் பெற உதவும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, ராஜராஜேஸ்வரி அம்மனை போற்றும் ஸ்தோத்திரங்களையும் வாசிக்கலாம். இந்த மந்திரத்தை நவராத்திரி காலத்தில் மட்டுமின்றி அனைத்து நாட்களும் உச்சரிப்பது சிறப்பு. பிரம்ம முகூர்த்த வேளை, 48 நாள் சங்கல்பம் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதால் அன்னை ராஜராஜேஸ்வரியின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்.
கவிதாயினியின் இரவுகள்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!
எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
{{comments.comment}}