நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மிக முக்கியமானதாகும். இருந்தாலும் சில குறிப்பிட்ட நாட்களும், திதியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி நவராத்திரியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று தான் இன்றைய மூன்றாம் நாள் வழிபாடு. நவராத்தியின் முதல் மூன்று நாட்களும் துர்கையை வழிபடுவதற்கான நாட்களாகும். துர்கை அம்மன் தான் தைரியம், தெளிவு, ஆற்றல், வெற்றி ஆகியவற்றை தரும் தேவியாக கருதப்படுகிறாள். இவளை வழிபட்டால் பயம் நீங்கி, தைரியம் பிறக்கும். தடைகள் விலகி, மங்களங்கள் கூடி வரும். அப்படிப்பட்ட துர்கை வழிபாட்டின் நிறைவு நாள் தான் நவராத்திரியின் மூன்றாம் நாள்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாகவும், இரண்டாவது நாளில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபட்டதை தொடர்ந்து மூன்றாவது நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை, என்ன மலர் மற்றும் நைவேத்தியம் படைத்து, எப்படி வழிபட வேண்டும், என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 3ம் நாள் வழிபாடு :
அம்பாளின் பெயர் - வாராஹி
கோலம் - மலர் வகை கோலம்
மலர் - சம்பங்கி
இலை - துளசி
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
தானியம் - காராமணி சுண்டல்
பழம் - பலாப்பழம்
ராகம் - காம்போதி
நிறம் - நீலம்
நவராத்திரியின் மூன்றாவது நாளுக்குரிய தேவியாக, அம்பிகையின் போர்ப்படை தளபதியாகவும், சப்தகன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் வாராஹியே விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் பகை, வழக்கு, கடன், தடைகள், துன்பங்கள் ஆகியவை நீங்கும். அம்பிகைக்கு போரில் வெற்றியை பெற்றுத் தந்த வாராஹியை வழிபட்டால் நம்முடைய வாழ்விலும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் மூன்றாவது நாளில் வாராஹியை போற்றும் ஸ்ரீ வாராஹி மாலை மந்திரத்தை பாராயணம் செய்து வழிபடலாம். வாராஹியின் 108 மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூல மந்திரம் :
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் வாராகியே நமஹ
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
{{comments.comment}}