நவராத்திரியின் 6ம் நாள், மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவு நாளாகும். இது மகாலட்சுமியிடம் வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய சிறப்பான நாளாகும். அதோடு இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடும் நாள், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவதற்கு சிறப்புமிக்க புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது இன்னும் சிறப்புக்குரியதாகும். நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை எந்த வடிவத்தில், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 6ம் நாள் வழிபாடு :
அம்மனின் வடிவம் - சண்டிகா தேவி
கோலம் - கடலை மாவால் தேவியின் நாமத்தை கோலமிட வேண்டும்
மலர் - செம்பருத்தி
இலை - சந்தன இலை
நைவேத்தியம் - தேங்காய் சாதம்
சுண்டல் - பச்சை பயிறு சுண்டல்
பழம் - நார்த்தம்/ ஆரஞ்சு
ராகம் - நீலாம்பரி
நிறம் - கிளிப் பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம் :
நவராத்திரியின் 6ம் நாள் மந்திரம் :
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
காயத்ரி மந்திரம் :
"ஓம் சண்டிகாயை வித்மகே
துர்காயை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
நவராத்திரியின் 6ம் நாளுக்குரிய தேவியான சாமுண்டி தேவி உக்கிர வடிவமாக கருதப்படுபவள். இவள் காளியின் மறு வடிவமாக கருதப்படுபவள் ஆவாள். இவள் குழந்தை மனம் படைத்தவள் என்றாலும், தன்னுடைய பக்தர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களை காப்பதற்காக கோபப்படக் கூடியவள்.
நவராத்திரியின் 6 ம் நாளில் 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை அழைத்து கன்னிகா பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானதாகும்.
அதிரடி சரவெடி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றும் சவரனுக்குரூ.720 உயர்வு!
நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!
அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை
இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!
இன்று நவராத்திரி 6ம் நாள்...அம்பிகையின் வடிவம், பிரசாதம், நிறம், மலர் பற்றிய முழு விபரம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2025... இன்று பாச மழையில் நனைய போகும் ராசிகள்
சனிக்கிழமை வந்தாச்சு.. நாமக்கல், கரூரில் என்ன பேசுவார் விஜய்?.. குத்தவச்சுக் காத்திருக்கும் கட்சிகள்
வானிலை எச்சரிக்கை: இன்று 6, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நாளை கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை!
{{comments.comment}}