திரைத்துறையில் 14 வருடங்கள்.. சமந்தாவுக்கு சூப்பராக வாழ்த்து சொன்ன நயன்தாரா!

Feb 26, 2024,02:31 PM IST

சென்னை:  நடிகை சமந்தா திரைத்துரைக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு வயது 36. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவரது திருமண வாழ்க்கை 2021ல் மனக்கசப்பு காரணமாக முறிந்து போனது.




சமந்தா கடந்த 2010ம் ஆண்டு முதன்முதலில் திரைத்துறையில் கால் பதித்தார். இவர் முதன் முதலில் யே மாயா சேசவே என்னும் தெலுங்கு படத்தில் மூலமாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படம் தான் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என வெளிவந்தது.


அதன் பிறகு  அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சமந்தா. தமிழில், பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி,  24, தெறி, மெர்சல், சீமராஜா, நான் ஈ, நடுநிசி நாய்கள், தங்க மகன், 10 எண்றதுக்குள்ள, காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட தமிழ் படங்களில் நடித்தவர். தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தாவுக்கு நீதானே எந்தன் என் பொன்வசந்தம் திரைப்படம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்று தந்துள்ளது. இது தவிர நந்தி விருது, விஜய் டிவி விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.


சமீபத்தில் இவருக்கு தசை அழற்சி நோய் ஏற்பட்டு. மிகுந்த பாதிப்புக்குள்ளாகி நடிப்பிற்கே பிரேக் விட்டார். அந்த நோயில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட நிலையில் மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நடிகை சமந்தா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, சமந்தாவிற்கு நடிகை  நயன்தாரா  இணைய பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அதில், சாம் 14 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதற்கு சமந்தா நன்றி என் அழகான நயன்தாரா என்று பதில் அளித்துள்ளார். 2022 ல் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல்  திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. இவர் மட்டும் இன்றி சமந்தாவின்  ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்