"38 பெருசா.. 26 பெருசா.. தக்காளி சாதம் சாப்பிட முடியலைங்க என்னால".. ஜெயக்குமார் அதிரடி!

Jul 19, 2023,04:38 PM IST
சென்னை: பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் 26 பேர்தான் உள்ளனர். 38 பெருசா, 26 பெருசா என்று கேட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில், டெல்லியில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  கூட்டம் சிறப்பாக நடந்தது. அதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப் பெரிய  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப் பெரிய சக்தி என்பது இந்திய அளவில் தெரிந்து விட்டது. அதனால்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றார் ஜெயக்குமார்.



எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, 38 பெருசா, 26 பெருசா. அவங்க 26 நாங்க 38. அப்ப 38தான் பெருசு. இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மிகப் பெரிய வெற்றி பெறுவோம். மகத்தான வெற்றியைப் பெறுவோம்.  தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் ஜெயக்குமார். 

தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளி விலை உயர்வால் எங்க வீட்டில் தக்காளி சாதமே சாப்பிட முடியவில்லை என்று கூறி கலகலக்க வைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில்,  ஓபிஎஸ் யாருங்க.. அவரை எப்படி அழைப்பாங்க. அவர் தனி மனிதர், இயக்கம் கிடையாது. இயக்கத்தைத்தான் அழைப்பாங்க என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்