நெல்லை : கனமழை எச்சரக்கை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை ஒருபுறம், வெள்ளம் ஒரு புறம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரு அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் கூடங்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மிக அதிக அளவில் மழை அளவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}