என்டிடிவி பப்ளிக் ஒப்பீனியன் சர்வே.. முதல்வர் பதவிக்கு சித்தராமையாதான் "பெஸ்ட்"!

May 03, 2023,10:06 AM IST
பெங்களூரு: என்டிடிவி நடத்திய பப்ளிக் ஒப்பீனியன் சர்வேயில், கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாதான் சரியான சாய்ஸ் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக  என்டிடிவி தொலைக்காட்சியும், சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து பப்ளிக் ஒப்பீனியன் என்ற சர்வேயை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளன.

இதில் அடுத்த முதல்வராக யார் வரலாம், உங்களது ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கை காட்டியுள்ளனர். கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரின் ஆதரவு சித்தராமையாவுக்குக் கிடைத்துள்ளது.  இளைஞர்களை விட வயதானவர்கள் மத்தியில்  சித்தராமையாவுக்கு அதிக ஆதரவு காணப்படுகிறது.



2வது இடத்தில் தற்போதைய முதல்வர் பி.எஸ். பொம்மை உள்ளார்.   இவருக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

3வது இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் முதல்வருமான எச். டி.குமாரசாமி வருகிறார். இவருக்கு 15 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.  அதேசமயம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு பெரிதாக ஆதரவில்லை. அவர் குறைந்த ஆதரவுடன் 4வது இடத்தில் உள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் நான்கு முறை முதல்வர் பதவியை வகித்தவருமான பி.எஸ். எடியூரப்பாவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. இவர் தனது முதல்வர் பதவியை ஒருமுறை கூட முழுமையாக முடித்ததில்லை என்பது வரலாறு. பொம்மை வருவதற்கு முன்பு எடியூரப்பாதான் முதல்வர் பதவியில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்