"மீரா! இப்போ நான் ஓடுறது உன்கிட்ட இருந்து தப்பிக்க இல்ல... உன் கூட சேர்ந்து வாழ்றதுக்கான எனர்ஜியைச் சேர்த்துக்க! சீக்கிரம் வா, டீ ஆறிடப் போகுது!"
மீரா பூரிப்பாக சிரித்தபடி அவனைத் துரத்திக்கொண்டே அந்த இஞ்சி டீ கடையை அடைந்தாள். இருவரும் நனைந்த உடலோடு, ஆவி பறக்கும் டீயைக் கையில் ஏந்தினார்கள். அந்தத் தேநீரின் சூடு, மழையின் குளிர்ச்சியை மெல்ல விரட்டியது.. அவர்களுக்குள் மேலும் வெம்மையைக் கூட்டியது.
தேநீரை உறிஞ்சியபடி அர்ஜுன் கேட்டான், "ஏய் மீரா, ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. இந்த மழையில நாம நனையலன்னா, நாம இப்போ இவ்வளவு க்ளோஸா பேசியிருக்கவே மாட்டோம்ல? இந்த மழைதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருந்த அந்த 'ஈகோ' சுவரை இடிச்சிருக்கு."

மீரா அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். "எஸ் அர்ஜுன்.. உண்மைதான்.. எனக்குத் தெரியும். ஆனா, இந்த மழை மாதிரி உன் அன்பும் திடீர்னு வந்துட்டு போயிடக் கூடாது. எனக்குத் தேவை மழைக் காலம் இல்ல, ஆயுசுக்கும் நனைய வைக்கிற 'அடை மழை காலம்'.. அதாவது ஓயாத அன்பு மழைதான்"
அர்ஜுன் அவள் கையைப் பிடித்து, அவள் உள்ளங்கையில் ஒரு சிறிய அழுத்தத்தைக் கொடுத்தான். "வாக்குறுதி கொடுக்கத் தெரியாது மீரா. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். உன் குடையைத் தொலைக்கிற இடத்துல எல்லாம் நான் உன் மழையா இருப்பேன். நீ நனையணும்னு ஆசைப்படுற இடத்துல எல்லாம் நான் உன் மேகமா இருப்பேன்!"
அர்ஜூன் சொல்லச் சொல்ல மீராவுக்குள் மகிழ்ச்சி ஊற்றாகப் பெருக்கெடுக்க.. பேசத் தோன்றாமல் அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.
"என்ன மீரா... ஒரு மாதிரியா பார்க்குற?" என்று அர்ஜுன் மெல்லிய குரலில் கேட்க, மீரா சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
"இல்ல அர்ஜுன்... நாம வாழ்க்கை முழுவதும் ஒன்னா நனையலாம்னு சொன்னியே, அது நிஜமாவே நடக்குமா? என் வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு உனக்கே தெரியும். காலேஜ் முடிஞ்சதும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியாம போயிட்டா... இந்த மழையெல்லாம் வெறும் ஞாபகமா மட்டும் ஆகிடாதா?" - அவள் குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்தது.
அர்ஜுன் அவளது கைகளை மேலும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். "மீரா, வானத்துக்கும் பூமிக்கும் இடைவெளி அதிகம் தான்... ஆனா மழை அந்த இடைவெளியை ஒரு நொடியில குறைச்சிடுதுல? அதுபோலத்தான் உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் எவ்வளவு தூரம் இருந்தாலும், என் காதல் அந்த இடைவெளியை இல்லாம பண்ணிடும். பயப்படாத... உன் அப்பா முன்னாடி நின்னு, 'உங்க பொண்ணை நான் மழையில நனைய விடமாட்டேன், மழையாவே இருந்து பார்த்துப்பேன்'னு சொல்லுற தைரியம் எனக்கு இருக்கு!"
மீரா சிலிர்த்துப் போனாள். "அப்பா முன்னாடி போய்ப் பேசுவியா? அவர் பார்த்தாலே நீ ஓடிடுவன்னு நினைச்சேன்!" என்று அவள் கிண்டலாகச் சொல்ல, இருவரும் அந்தச் சிறிய மரத்தடியில் கலகலவென சிரித்தார்கள்.
அந்தச் சிரிப்பு அடங்குவதற்குள், அர்ஜுன் திடீரென அவள் முகத்தருகே குனிந்தான். அவனது மூச்சுக்காற்று அவள் கன்னங்களில் பட, மீரா கண்கள் செருக நின்றாள். "மீரா... ஒன்னு சொல்லட்டுமா? இந்த உலகத்துலேயே ரொம்ப அழகான விஷயம் எது தெரியுமா? மழையில நனையுற ரோஜா இல்ல... வெட்கத்துல சிவக்குற உன் முகம் தான்!"
மீராவின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. "அர்ஜுன்... போதும்... எல்லாரும் பார்க்குறாங்க.. ரொம்ப ரொமான்ஸாப் போகாதே!" என்று முணுமுணுத்தாள். ஆனால், அங்கிருந்த யாருமே அவர்களைக் கவனிப்பதாகத் தெரியவில்லை; எல்லாரும் மழையின் அழகிலும், சூடான தேநீரிலும் லயித்திருந்தார்கள்.
அப்போது அந்த டீ கடைக்காரர் பெரிய குரலில் சொன்னார், "தம்பி... மழை நிக்கிற மாதிரி தெரியல. பஸ்ஸை எடுக்கச் சொல்லிட்டாங்க. சீக்கிரம் கிளம்புங்க!"
அந்த வார்த்தை அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகத் தெரிந்தது. அர்ஜுன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். "வா... பஸ்ஸைத் தவற விட்டுட்டோம்னா, இந்த மழையில நாம ரெண்டு பேர் மட்டும் இங்கேயே செட்டில் ஆக வேண்டியதுதான்!"
மீரா அவனைத் துரத்திக்கொண்டு பேருந்தை நோக்கி ஓடினாள். பேருந்தின் படிக்கட்டில் ஏறும்போது, அவள் கால் சறுக்க... அர்ஜுன் சட்டென்று அவளைத் பற்றித் தாங்கினான். அந்த ஒரு நொடி... பேருந்திற்குள் இருந்த சத்தங்கள் எல்லாம் மறைந்து, அவனது இதயத்துடிப்பு மட்டும் அவளுக்குக் கேட்டது.
மீரா அவன் கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள், "அர்ஜுன்... நிஜமாவே ஆயுசுக்கும் இதே மாதிரி என்னைத் தாங்குவியா?"
அர்ஜுன் சிரித்துக்கொண்டே அவளை உள்ளே ஏற்றிவிட்டு, அவளுக்குப் பின்னால் நின்றபடி காதில் ரகசியமாகச் சொன்னான்:
"மீரா... நீ சறுக்கும்போது தாங்குறதுக்கு நான் ஒன்னும் தரையில இருக்கிற கல் இல்ல... நீ விழவே முடியாதபடி உன்னைத் தாங்கிப் பிடிக்கிற உன் சுவாசக் காற்று.. மழை மேலிருந்து கீழே விழுவது அழகு... ஆனால், உனக்காக நான் உன் காதலில் விழுவதுதான் பேரழகு!"
வெளியில் மட்டுமல்ல.. உள்ளுக்குள்ளும் வேகம் பிடித்தது.. மழை!
(தொடரும்)
நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை..தவெக திட்டவட்டம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
சிபிஐ-க்கு விஜய் கடிதம்: விசாரணையை சென்னையில் நடத்த கோரிக்கை
தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்
"என்ன மீரா... ஒரு மாதிரியா பார்க்குற?".. (நீ மழை - 6)
யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
ஆஸ்கர் 2026 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்
Monday Motivation: நரியும் திராட்சையும்!
மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!
{{comments.comment}}