மீராவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின..
அர்ஜுன் கல்லூரியின் 'ஸ்போர்ட்ஸ் ஸ்டார்' மட்டுமல்ல, படிப்பிலும் கெட்டிக்காரன். ஆனால், மீராவுக்கு அவனைப் பார்த்தாலே ஒருவிதமான 'ஈகோ'. ஆனால் ரொம்பப் பிடிக்கும் அவனை. "ரேட்டும் கேட்டும்" போலத்தான் இருவரும்.. மோதிக் கொண்டே போனால் ஒரு நாள் அது இணைந்து விடும் என்பார்களே.. அதுபோலத்தான் இவர்களுக்குள்ளும் பற்றிக் கொண்டது.
கல்லூரி முடிந்து சென்ற அந்த ஊட்டி சுற்றுலா, அவர்கள் இருவருக்கும் மறக்க முடியாத ஒரு காவியம். அந்தச் செங்குத்தான மலைப்பாதையில் பேருந்து ஊர்ந்து கொண்டிருக்க, ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. சட்டென்று மேகங்கள் கறுத்து, ஒரு மெல்லிய தூறல் ஆரம்பமானது.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுன் மெதுவாக அவள் காதுக்கு அருகில் வந்து அமர்ந்து, "என்ன மேடம்? மழையைப் பார்த்து அப்படியே மெய்மறந்து போயிட்டீங்க? இந்த மழையை விட, நான் நேத்து சொன்ன அந்த ஜோக் சூப்பரா இருந்துச்சுல்ல?" என்று ஹஸ்க்கியான குரலில் பேச, மீராவின் காது மடல் சிலிர்த்தது.. கழுத்தெல்லாம் சூடானது.

படபடப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்த அவள் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்தாமல், "அர்ஜுன்! இந்த அழகான கிளைமேட்ல உன்னோட அந்த மொக்கை ஜோக்கைச் சொல்லி மூச்சடைக்க வைக்காதே. பாரு, அந்த மேகங்கள் எப்படி மலையைத் தொட்டுட்டுப் போகுதுன்னு!" என்று பரவசத்தோடு அவனை (அவளையும்) திசை திருப்பினாள்.
"மேகம் மலையைத் தொடுறது இருக்கட்டும்... நீ ஏன் இன்னும் என் கண்ணைப் பார்க்காம அந்த ஜன்னலையே பார்த்துட்டு இருக்க? பயமா?" என்று அர்ஜுன் மீண்டும் ரகசியக் குரலில் கேட்டான்.
மீராவு மேலும் சிவந்தது. "நோ. பயமெல்லாம் இல்லை... ஆனா உன் கண்ணைப் பார்த்தா, நான் சொல்ல நினைக்கிற எதையும் சொல்ல முடியாமப் போயிடுமோன்னு ஒரு தயக்கம்.. என்னமோ பண்ணுதுடா," என்று சரண்டரானாள். இதைத்தானே அர்ஜூன் பயபுள்ளையும் எதிர்பார்த்தது.. மீராவின் வெட்கத்தையும் தயக்கத்தையும் ஜாலியாக ரசித்தான்.
அப்போது பேருந்து ஒரு வளைவில் திரும்ப, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அனைவரும் உற்சாகத்தில் கத்த, அர்ஜுன் சட்டென்று ஜன்னல் கண்ணாடியை இறக்கி, மழையை உள்ளே வரவிட்டான்.
"ஏய் அர்ஜுன்! என்ன பண்ற? நனையப் போறோம்!" என்று மீரா பதறினாள்.
"நனையட்டுமே மீரா! இந்த மழையில நனையாம, வெறும் ஜன்னல் வழியா பார்க்குறதுல என்ன சுகம் இருக்கு? இதோ பாரு..." என்று சொல்லி, தன் கையை வெளியே நீட்டி மழைத்துளிகளை ஏந்தினான். பிறகு அந்தத் துளிகளை மீராவின் முகத்தில் மெல்லத் தெளித்தான்.
மீரா முதலில் கோபப்பட்டாலும், அந்தத் துளிகளின் குளிர்ச்சி அவளை அமைதிப்படுத்தியது. "ரொம்ப ஓவரா பண்ற அர்ஜுன்," என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
கொட்டும் மழைக்சு சூடா டீ சாப்பிட்டா எப்படி இருக்கும் என்று பஸ்சுக்குள் பலரும் நினைக்கத் தொடங்கியிருந்தனர்.. அதை டிரைவர் புரிந்து கொண்டாரோ என்னவோ ஒரு ரோட்டோர டீ கடை அருகே பஸ்ஸை நிறுத்தினார்.
"வா... இறங்கிப் போலாம்!" என்று அர்ஜுன் சொல்ல, மீரா சற்று தயங்கினாள். ஆனால் அவனோ சட்டென்று மீராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மழையில் குதித்தான்.
இருவரும் ஒரு பெரிய மரத்தடியில் ஒதுங்கினார்கள். சொட்டச் சொட்ட நனைந்திருந்த மீரா, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அர்ஜுன் தன் ஜாக்கெட்டைக் கழற்றி அவளுக்குப் போர்த்தினான்.
"இப்போ எப்படி இருக்கு?" என்று அவன் கேட்க, "குளிர் போயிடுச்சு... ஆனா பயம் இன்னும் போகல," என்றாள் மீரா.
"எதுக்கு பயம்?"
"இந்த நிமிஷம் இப்படியே நின்னுடாதான்னு ஒரு பயம். உன் கூட, இந்த மழையில, இந்த ஊட்டி மலையில... வாழ்க்கை முழுசும் இப்படியே டிராவல் பண்ண முடியுமா அர்ஜுன்?" என்று அவள் கண்கள் கசியக் கேட்டாள்.
அர்ஜுன் அவள் கைகளைத் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்துக் கொண்டு, "மீரா, இந்த மழை இன்னைக்கு நிக்கும்... ஆனா உன் மேல நான் வச்சிருக்கிற நேசம், இந்த மலை மாதிரி நிலையானது. இந்த டூர் மட்டும் இல்ல, நம்ம லைஃப் லாங் ட்ரிப்ல நீதான் என் கோ-பாசஞ்சர். ஓகேவா?" என்று ஆழமாகச் சொன்னான்.
மழை மெல்ல வலுவிழந்திருந்தது. சூடான மூச்சு மீராவிடமிருந்து பெருமூச்சாக வெளிப்பட்டது. மெல்ல அர்ஜூன் அருகில் நெருங்கி வந்த அவள், மெதுவான குரலில் "அர்ஜுன்... நாம இப்போ பேசிக்கிட்டது எல்லாம் நிஜம் தானே? காலேஜ் முடிஞ்சதும் இதெல்லாம் ஒரு கனவு மாதிரி கலைஞ்சுடாது இல்ல?"
அர்ஜுன் அவளைத் தன் பக்கம் திருப்பி, அவள் நனைந்த கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட்டான். "ஏய் லூசு... இந்த மழையும், இந்த மலையும் சாட்சியா... மீரா போடுற எல்லா மொக்கை சண்டையையும் ஆயுசுக்கும் சகிச்சுக்க அர்ஜுன் சம்மதிக்கிறான் அப்படின்னு எழுதிக் கொடுக்கவா.. அப்புறம் நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது!"
மீரா சிரித்துக்கொண்டே, "நீ நிஜமாவே ஒரு லூசு தான் அர்ஜுன்!" என்று சொல்லி அவனைப் பெருமிதத்துடன் பார்த்தாள்.. எப்படி மாத்திட்டான் என்னை இவன் என்ற சந்தோஷமும் கூடவே மனசை உரசியது பெருமையாக.
சட்டென்று அர்ஜுன் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு, "ஆனா ஒரு கண்டிஷன்... இந்த அக்ரிமெண்ட் செல்லுபடியாகணும்னா, நீ இப்போவே அந்த டீ கடையில எனக்கு ஒரு ஸ்ட்ராங் இஞ்சி டீ வாங்கித் தரணும். ஏன்னா, ரொமான்ஸ் பண்ணதுல எனக்கு இப்போ பயங்கரமா பசிக்குது!" என்றான் சீரியஸான முகத்தோடு.
மீரா திகைத்துப்போய் அவனைப் பார்க்க, அர்ஜுன் கலகலவென சிரிக்கத் தொடங்கினான்.
"பாத்தியா... நீ எமோஷனலா எதாவது சொல்லுவேன்னு பார்த்தா, கடைசியில டீ கேக்குற?" என்று மீரா அவனை அடிக்கத் துரத்த, அந்த ஈரமான சாலையில் அர்ஜுன் ஓட ஆரம்பித்தான்.
தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் காதலர்களாகத் தெரியவில்லை; மழையில் நனைந்து விளையாடும் இரண்டு குழந்தைகளாகத் தெரிந்தார்கள்.
அப்போது அர்ஜுன் ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்துச் சொன்னான்..!
(தொடரும்)
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
இளமை திரும்பிய தருணம்.. கூடுவாஞ்சேரியில் கோலாகலமாக நடந்த மூத்த குடிமக்கள் சங்கமம்
நட்பு எனும் கவசம்
ஆச்சரியம் ஆனால் உண்மை
கற்ற கல்வி உதவுமா?
கலகலக்க வைக்கும் கிராமத்து விளையாட்டுகள்.. அது ஒரு பொற்காலம்!
"என்னை மூச்சடைக்க வைக்காதே அர்ஜூன்".. (நீ மழை.. 5)
T20 World Cup: ஈடன் கார்டனை அதிர விட்ட சேட்டன் சஞ்சு.. செம ஆட்டம்.. செமி பைனலில் இந்தியா!
Iran Flashback: அயதுல்லா கொமேனி யார் தெரியுமா?.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள லிங்க்!
{{comments.comment}}