இளைஞர்களின் மனம் கவர்ந்த.. டிராகன்.. மார்ச் 21ல் ஓடிடியில் வெளியீடு.. Netflix அறிவிப்பு..!

Mar 18, 2025,02:43 PM IST
சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், உருவான டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21 முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக netflix நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர்  பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கே.எஸ் ரவிக்குமார், கௌதம் மேனன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது‌. அதாவது படிப்பின் அவசியத்தை மையமாகக் கொண்டு குறுக்கு வழியில் சென்று பணம் ஈட்டினால் எந்த அளவிற்கு அது நிரந்தரமாக இருக்கும். 

தே சமயத்தில் உண்மையாகவும் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கருத்தை இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற பாணியில் மனதில் பதியும்படி ஜாலியாக படம் உருவாக்கிய இயக்குனர் அனைவராலும் பாராட்டை பெற்றார். அதே சமயத்தில் இப்படம் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்து  சாதனை படைத்தது.



 இப்படம் தற்போது வரை பல்வேறு  திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக இப்படம் வெளியாகும் முன்பே டிராகன் திரைப்படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருந்தது. ஆனால் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம்,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்