நீங்க நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா.. முதல்ல இதைப் படிங்க!

Jul 20, 2023,01:23 PM IST
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் இனிமேல் தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் ஷேர் செய்ய முடியாது என்று நெட்பிளிகிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும்தான் அந்த அக்கவுண்ட்டை ஷேர் செய்து இனி பார்க்க முடியுமாம். ஒரே கணக்கை இனி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். அது வீட்டிலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, குடும்பத்தினர் மட்டுமே பார்க்க முடியும். அதற்கேற்ப நமது அக்கவுண்டில் எந்த டிவைஸில் நாம் பார்ப்போம் என்பதை சொல்லி விட வேண்டும். அந்த டிவைஸ்தாண்டி வேறு எதிலும் நாம் பார்க்க முடியாது.



இதற்காக Transfer Profile and Manage Access and Devices என்ற ஆப்ஷனை நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்து வருகிறதாம்.

கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாஸ்வேர்ட் கட்டுப்பாட்டை அமல்படுத்தியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இதில் அடக்கம். தற்போது இந்தியாவிலும் இதை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் உலகம் முழுவதும் 60 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் அதற்குக் கிடைத்துள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்