கலிபோர்னியா: நெட்பிளிக்ஸ் சானலின் மிகப் பிரபலமான Sex Education தொடரில் இடம் பெற்ற வீடு விற்பனைக்கு வருகிறதாம்.
அட்டகாசமான வீடு அது. இங்கிலாந்தின் ஹியர்போர்ட்ஷயர் அருகே, ராஸ் ஆன் வை நகரில் உள்ள சைமன்ட்ஸ் என்ற இடத்தில்தான் அட்டகாசமான பங்களாக உள்ளது. கோட்டை போன்ற இந்த வீடு ஆற்றுங்கரையோரமாக எழில் சூழ்ந்த இடத்தில் இருக்கிறது. செக்ஸ் எஜுகேஷன் தொடர் மூலம் இந்த வீடும் பிரபலமானது.
இந்த வீடுதான் தற்போது 10.5 பவுண்டு என்ற தொகைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீடானது, செக்ஸ் எஜுகேஷன் தொடரில் முக்கியப் பங்கு வகித்த ஒன்றாகும். செக்ஸ் எஜுகேஷன் தொடரின் முக்கியக் கேரக்டராக வந்தவர் ஆசா பட்டர்பீல்ட். ஓடிஸ் மில்பர்ன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவரது செக்ஸ் தெரபிஸ்ட் தாயாராக நடித்தவர் கில்லியன் ஆண்டர்சன். இந்த வீட்டில்தான் இந்தக் கதைக் காட்சிகள் நடைபெறுவதாக இருக்கும்.
இந்த வீட்டின் உரிமையாளர் பெயர் நைட் பிராங்க். இவர்தான் வீட்டை தற்போது விற்பனை செய்யவுள்ளார். வை நதிக் கரையோரமாக இந்த வீடு அமைந்துள்ளது. 5 பெட்ரூம், 3 பாத்ரூம்கள் மற்றும் 3 தளங்களுடன் கூடிய வீடு இது. அட்டகாசமான கிச்சன், புல் வெளி, சம்மர் ஹவுஸ் என சகல வசதிகளும் நிறைந்த வீடு இது.
21 வருடமாக இந்த வீட்டை வைத்திருந்தார் பிராங்க். தற்போது இதை விற்பனைக்கு விட்டுள்ளார். செக்ஸ் எஜுகேஷன் தொடர் மட்டுமல்லாமல், சேனல் 4 தொடர்கள் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளது இந்த வீடு. இந்த வீடு அமைந்துள்ள லொகேஷன்தான் இந்த வீட்டுக்கே தனி அழகைக் கொடுத்துள்ளது. இந்த வீடு மட்டுமல்லாமல் இதன் சுற்றுப் புறங்களும் கூட அட்டகாசமானவையாகும். இதனால்தான் பலரும் இந்த வீட்டில் ஷூட்டிங் நடத்த ஆசைப்படுவார்கள். காட்சிகளுக்கு அதிக வலு சேர்ப்பதாக இந்த வீடு இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.
1912ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு இது. ஆரம்பத்தில் இதை மீன் பிடி விடுதியாகவே பயன்படுத்தி வந்தனர். இங்கு வந்து தங்கி மீன் பிடித்து சாப்பிட்டுச் செல்வதை பழக்கமாக வைத்திருந்தனர். இதுவரை 3 பேரின் கைக்கு இந்த சொத்து மாறியுள்ளது. 2002ம் ஆண்டு பிராங்க் இந்த வீட்டை வாங்கிய பின்னர் டோட்டலாக இதை மாற்றியமைத்தார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}