நாங்கள் பாஜக.,வுடன் எந்த காலத்திலும் சேர மாட்டோம்.. அடித்துச் சொன்ன சரத்பவார்

Aug 14, 2023,10:20 AM IST
மும்பை : எங்கள் கட்சி ஒரு போதும் பாஜக.,வுடன் இணையாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவும், பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் சரத் பவார் கலந்து கொண்டதாலும் அவர் பாஜக.,வுடன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியின் முதல் இரண்டு ஆலோசனை கூட்டத்திலும் சரத் பவார் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் எதிர்க்கட்சிகள் அணியில் இல்லாமல் பாஜக.,விற்கு ஆதரவாக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.



இந்நிலையில் நேற்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்ட சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் சரத் பவார். அப்போது பேசிய அவர், நிறைய நலம் விரும்பிகள் நாங்கள் பாஜக.,வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டு வருகிறார்கள். ஆனால் நாங்கள் எந்த நிலையிலும் பாஜக.,வுடன் இணைய மாட்டோம். பாஜக.,வின் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துப் போகாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எங்களுக்குள் சிலருக்கு மாற்று கருத்து உண்டு. எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம் என சிலருக்கு சந்தேகம் உள்ளது. அதனால் தான் எங்களுக்குள் பேசி முடிவு செய்தோம். அஜித் பவார் உடனான சந்திப்பில் எந்த ரகசியமும் கிடையாது. அவர் எனது உறவினர், பவார் குடும்பத்தில் ஒருவர். நான் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கக் கூடியவன். அதனால் நான் எனது குடும்ப உறுப்பினர்கள் எவரையும் சந்திப்பதில் எந்த காரணமும் கிடையாது. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

அஜித் பவார் - சரத் பவாரின் ரகசிய சந்திப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் எப்போது, எங்கு சந்தித்தார் என்று கூட எனக்கு தெரியாது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்