திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக, பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மிகக் கொடூரமான முறையில் மரணத்தை சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 32 பேரிடம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். 60 வயதான இவர் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2ஆம் தேதி ஜெயக்குமார் காணாமல் போனதாக அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மே 4ம் தேதி காலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் உடல் பாதி கருகிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. அதில் பல காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். மரண வாக்குமூலம் என்ற பெயரில் அந்தக் கடிதம் இருந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படை அமைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். ஜெயக்குமார் கடிதத்தில் கூறப்பட்டிருந்த தலைவர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் இறந்து கிடந்த தோட்டத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா.. அதற்கான தடயம் எதுவும் இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இறந்த ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிக மோசமான மரணத்தை சந்தித்திருப்பது உறுதியாகியுள்ளது.
ஜெயக்குமாரின் கை கால்கள் கட்டப்பட்டு உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததாம். வயிற்றில் கடப்பாக் கல், இரும்பு தகடுகள் போன்றவற்றைக் கட்டியுள்ளனர். மரணமடைவதற்கு முன்பு சுமார் 5 மணி நேரம் அவரை கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியிருக்கலாம் என்று சந்தேதிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உயிரிழந்து 4 மணி நேரத்திற்குப் பின் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அளவுக்கு மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்து, உடலை எரிக்கும் அளவுக்கு ஜெயக்குமார் மீது வன்மம் கொண்ட எதிரிகள் யார் என்ற பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தற்போது போலீஸாரின் விசாரணை மேலும் தீவிரமடையவுள்ளது. இதுகுறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் கூறுகையில், இதை தற்கொலையாகவும் நாங்கள் கருதவில்லை, கொலையாகவும் கருதவில்லை. சந்தேக மரணமாக கருதி விசாரணை செய்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 32 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இறுதி பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும்போது இந்த மரணம் தொடர்பாக சில உறுதியான தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}