Gyeongseong Creature Part 1: அட்டகாசமான மேக்கிங்.. அதிர வைக்கும் நடிப்பு.. மறக்காம பாருங்க!

Dec 23, 2023,02:56 PM IST

சென்னை: கொரியன் சீரிஸ் பார்க்கும் வெறித்தனமான ரசிகர்களா நீங்க.. அப்படீன்னா இந்த சீரிஸை இந்நேரம் நீங்க பார்த்திருப்பீங்க.. மத்தவங்க மறக்காம இதைப் படிங்க.. படிச்சுட்டு போய்ப் பாருங்க.. நெட்பிளிக்ஸில் நேற்று வெளியான Gyeongseong Creature Part 1 வெப் திரில்லர் அட்டகாசமாக இருக்கிறது.


Gyeongseong Creature Part 1.. நெட்பிளிக்ஸில் நேற்று வெளியான திரில்லர் சீரியல். படு அற்புதமான மேக்கிங்கால் ரசிகர்களிடையே வெகு விரைவிலேயே பாப்புலராகி விட்டது. அருமையான நடிப்பு, தெளிவான திரைக்கதை, சிறந்த படமாக்கம் என பிரமாதமாக வந்துள்ளதாம் இந்த வெப் சீரிஸ். இந்த சீரிஸின் கதை பிரமாதமாக இருப்பதுதான் இதன் உடனடி வெற்றிக்குக் காரணம். பார்க் சியோ ஜூன் மற்றும் ஹான் சோ ஹீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


புகழ் பெற்ற ஹாட் ஸ்டவ் லீக் தொடரை இயக்கியவரான சுங் டாங் யூன்தான் இதையும் இயக்கியுள்ளார்.  கதை இதுதான்... ஜப்பானிடம் அடிமையாக இருக்கும் கொரியாவில் 1945ல் கதை நடப்பது போல வடிமைக்கப்பட்டுள்ளது.. அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் நடந்த அடக்குமுறைகள்.. ஒரு மருத்துவமனையில் நடைபெறும் விபரீதமான ஆராய்ச்சியின்போது வெளிப்படும் வினோதமான உயிரினம்..  அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்று கதை போகிறது.




படத்தில் விஷூவல் எபக்ட்ஸ் செமையாக இருக்கிறது. ஒரு டிவி தொடரில் இப்படியெல்லாம் ஜாலம் செய்ய முடியுமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு அட்டகாசமாக செய்துள்ளனர். தொடக்கக் காட்சிகள் அத்தனை தரமாக உள்ளன.. முதல் காட்சியிலிருந்தே விறுவிறுப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது. முதல் சீனிலிருந்தே இந்த சீரிஸ் உங்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. அடுத்து என்ன என்ற பரபரப்பில் நீங்களும் அத்தோடு ஓட ஆரம்பித்து விட முடியும். மிகப் பிரமாண்டமான மெனக்கெடலை கொடுத்துள்ளது படக் குழு.


ஒரு திரில்லர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு லேட்டஸ்ட் இலக்கணம் வகுத்துள்ளது கியாங்சியாங் கிரியேச்சர். சாப்ட்டான காதல் மற்றும் குடும்ப கொரியன் சீரியல்களைப் பார்த்து வருவோர் கூட இந்த சீரிஸை மிக மிக விரும்புவார்கள். மேக்கிங் அப்படி.


ரத்தம், இறந்த உடல்கள், மனதை உருக்கும் அந்த சத்தம்.. வாவ்.. படிச்சுப் பார்ப்பதை விட அதைப் போய்ப் பார்த்து உணருங்கள்.. கண்டிப்பாக ஈரக்குலையை உலுக்கும்!


இந்த வருடத்தின் மிகப் பிரமாதமான சீரிஸ் இது என்பதில் சந்தேகமே இல்லை..  இதுக்கு மேலேயும் இதைப் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணாம உடனே போய் அந்த சீரிஸைப் பாருங்க!

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்