மதுரை: தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். தீபாவளி பண்டிகை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது புத்தாடைகளும் பட்டாசுகளும் தான் பிரதானம். குறிப்பாக புது டிரஸ் எடுக்க தீபாவளிதான் எல்லோருக்கும் பெஸ்ட் சீசன்.
இந்த நன்னாளில் நம் இல்லங்கள் தோறும் உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக இனிப்புகளையும் பலகாரங்களையும் கொடுத்து தீபாவளி பண்டிகையின் பாரம்பரியத்தை பறைசாற்றுவர்.அப்படி வருடா வருடம் புதுத் துணிகள் அணிந்து பட்டாசு வெடித்து இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்க சிறுசுகளும் பெருசுகளும் எதிர்பார்த்து காத்து வருவது வழக்கம். அதிலும் பெண்களுக்கு ஏராளமான வித விதமான மாடல்களில் புது ஆடைகள் வரவு ஒவ்வொரு வருடமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஆண்களுக்கு அதே சட்டை அதே பேண்ட் தான். அதை விட்டால் வேறு என்ன மாடல் என சலித்துக் கொள்ளும் ஆண்களும் இங்கு உள்ளனர்.
அதே நேரத்தில் இந்த வருடம் என்ன டிரஸ் ட்ரெண்டிங்கில் உள்ளது என பலரும் கடைகடையாக ஏறி இறங்கி தேடுவதையும் வழக்கமாகக் செய்து வருவர். ஏனெனில் கடந்த வருடம் இந்த மாடல் எடுத்தாச்சு. இந்த வருடம் நாம் என்ன வித்தியாசமான டிரஸ் எடுக்கலாம் அப்படின்னு யோசிச்சு இன்டர்நெட்லயும் சோசியல் மீடியாக்களையும் ஒரு ரவுண்டு போய் வருவோம்.
அப்படி காத்து வரும் இளைஞர்களுக்கு இந்த வருடம் என்ன புது மாடல்கள் புத்தாடைகள் சந்தைகளில் வந்திருக்கிறது என்பது தெரியுமா. வாங்க பார்ப்போம்.
இந்த வருடம் என்ன புத்தாடைகள் வாங்கலாம் என காத்திருக்கும் 2கே கிட்ஸ்களை கவரும் விதமாக சந்தைகளில் பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்கள் ஏராளமாக வந்துள்ளன. இந்த ரகங்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
பாப்கார்ன் என்பது நம் சாப்பிடும் உணவு பொருள் அல்ல. மாறாக பாப்கான் போன்றே தோற்றத்தில் புசுபுசுவென, மிகவும் மென்மையாக இருக்கக்கூடிய துணி ரகம். அதேபோன்று பிரிண்டட் செய்யப்பட்ட டிஷ்யூ ரகங்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
இந்த தீபாவளி புது வரவுகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி செல்கின்றனர். அத்துடன் மிகவும் மென்மையாக இருப்பதால் இந்த பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்களை தேர்வு செய்வதாக இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன உங்க வீட்ல தீபாவளி பர்ச்சேஸ் ஆயிடுச்சா.. வாங்க நாமளும் ஒரு ரவுண்டு போய் பார்ப்போம்..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}