சென்னை: நடிகை சுனைனா நடித்துள்ள அமானுஷ்ய நிகழ்வுகள் நிறைந்த மனதை கதறடிக்கும், கிரைம் தொடரான "இன்ஸ்பெக்டர் ரிஷி" மார்ச் 29 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
நடிகை சுனைனா 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நாக்க முக்க பாடல் மிகப்பெரிய ஹிட் பெற்று வைரலானது .இதன் மூலம் முதல் படத்திலேயே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை சுனைனா.
இதனைத் தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை உள்ளிட்ட ஹிட் படங்களின் மூலம் பிரபலமானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறிய ரோலில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தவர். மாடலாக தமிழ் சினிமாவில் தன்னுடைய கெரியரை தொடங்கிய சுனைனா அவ்வப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருபவர்.
தற்போது நடிகை சுனைனா 10 எபிசோடுகளுடன் கூடிய திரில்லர் க்ரைம் மூவியான இன்ஸ்பெக்டர் ரிஷி யில் நடித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் சீரிஸை ஜே எஸ் நந்தினி இயக்கி உள்ளார். மேக் பிலிவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், இந்த டிராமா ஒரிஜினல் தமிழ் படமாக சுக்தேவ் லஹரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ரிஷி திகில் ஊட்டும் திரை டிராமாவாக உருவாகியுள்ளதாம். இது 10 எபிசோடு கொண்ட தொடராக அமைந்துள்ளது.
இந்தத் தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் குறித்து இயக்குநர் நந்தினி கூறுகையில், ஒரு படைப்பாளியாக, இன்ஸ்பெக்டர் ரிஷி திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. டீமுக்கு நன்றி என்றார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}